‘கல்லைக் கண்டால்..’ கமலின் நம்பிக்கை

கமல்ஹாசன் பத்து வேடங்களில் நடித்து அடுத்த மாதம் வெளிவரவிருக்கும் படம் ‘தசாவதாரம்’. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘கல்லைக் கண்டால்’ எனத் தொடங்கும் பாடல் ரசிகர்களிடையே பெரிய சலனத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் கமல்ஹாசன்.
இந்தப் பக்திப்பூர்வமான பாடலை கவிஞர் வாலி எழுதியிருக்கிறார். இந்தப் பாடல் காட்சியியை தனது நண்பர்களுக்கு கமல் திரையிட்டுக் காண்பித்தார். அப்போது, எனது பத்து வேடங்களிலும் இந்த வேடம் தான் தலையாயது என்று சொல்லியிருக்கிறார்.
“இந்தப் பாடல் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கடவுள் மேல் நம்பிக்கையை ஏற்படுத்துமாம். அதே சமயம் ஏற்கனவே கடவுள் நம்பிக்கை உள்ளவகளுக்கு அந்த நம்பிக்கை இன்னும் அதிகரிக்கும். அப்படியொரு உணர்வுப் பூர்வமான பாடல் காட்சி இது” என்று சொல்லியிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.
|