கமலுக்காக எந்த ரிஸ்க் எடுக்கவும் தயார் - த்ரிஷா

கமலுடன் நடிப்பதற்காக தன்னுடையை கேரியரில் எந்த ரிஸ்க் எடுக்கவும் தயாராக இருப்பதாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.
கமலின் மர்மயோகி படத்தில் நடிப்பதற்காக நடிகை த்ரிஷாவிடம் கால்ஷீட் கேட்டுள்ளனர். உடனே ஒப்புக்கொண்ட த்ரிஷா மர்மயோகிக்காக தன்னுடையை மற்ற படங்களின் கால்ஷீட்டை உடனடியாக கேன்சல் செய்துள்ளார். இதில் இரண்டு மெகா பட்ஜெட் தெலுங்கு படங்களும் அடக்கம்.
மர்மயோகிக்காக த்ரிஷாவிடம் இருநூறு நாட்கள் கால்ஷீட் கேட்கப்பட்டதாம். அதற்கு உடனடியாக சம்மதம் தெரிவித்துள்ளார் அவர். கமலுடன் நடிப்பதால் உங்களுடைய கேரியருக்கு நல்லது என நினைக்கிறீர்களா, தசாவதாரம் படத்தில் நடித்த அசினுக்கு அப்படி ஒன்றும் பிரமாதமான பெயர் கிடைத்து விடவில்லையே என்று கேட்டால், அசின் குறித்து நான் ஒன்றும் கூற விரும்பவில்லை, ஆனால் என்னைப் பொறுத்தவரை கமலுடன் நடிப்பதற்காக எத்தனை படங்கள் வேண்டுமானாலும் விட்டுக்கொடுப்பேன், கமலுக்காக எந்த ரிஸ்க்கும் எடுக்கலாம் என்று கூறுகிறார்.
பேச்செல்லாம் நல்லாத்தான் இருக்கு, நடிப்பு மட்டும் தான் வரமாட்டேங்குது என்று பேசிக்கொள்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தில்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|