அகம் புறம் படத்தில் ஷாம்

அகம் புறம் என்ற படத்தில் ஷாம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக 2 பிரபல கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.
தீநகர் படத்தை இயக்கிய திருமலை, அடுத்து இயக்கவிருக்கும் புதிய படத்துக்கு, ‘அகம் புறம்’ என பெயரிட்டுள்ளார். இப் படத்தில் கதாநாயகனாக ஷாம் நடிக்கிறார். அவருக்கு இப்படத்தில் இரண்டு ஜோடி. அது யார் யார் என்று இன்னும் முடிவாகவில்லை.
படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி திருமலை இயக்குகிறார். இயக்குநர்கள் கே.சுபாஷ், ஆர்.வி.உதயகுமார், பேரரசு, திருமலை ஆகியோர் படத்திற்கான பாடல்களை எழுதியிருக்கிறார்கள். பாடல்களை சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், பினாங்கு, தாய்லாந்து ஆகிய நாடுகளில் எடுக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|