விஜய் படத்தில் விக்ரம் வில்லன்?

எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கும் 'புலி' படத்தில் விக்ரமை வில்லனாக நடிக்க வைக்க முயற்சி நடைபெறுகிறது.
சிவகாசி படத்தை அடுத்து நடிகர் விஜய் 'ஆதி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அனேகமாக பொங்கலன்று வெளியாகும் எனத் தெரிகிறது. இதனையடுத்து எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் 'புலி' என்ற படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். 'அன்பே..ஆ.ரூயிரே..' படத்தின் கதாநாயகி நிலாதான் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மானை அணுகவிருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் வில்லனாக விக்ரமை நடிக்க வைக்க முயற்சி எடுத்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “அட்டகாசமான வில்லன் பாத்திரம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. தமிழ் சினிமாவில் இதுவரை வந்திராத வில்லனாக அந்தப் பாத்திரம் இருக்க வேண்டும்" என்று விக்ரம் கூறியிருந்தார்.
அத்தகைய வேடம் 'புலி' படத்தில் இருப்பதாகக் கூறும் சூர்யா, அதில் விக்ரமை நடிக்க வைக்கலாம் என்று விஜய்யிடம் கூறியிருக்கிறார். விக்ரம் சரியென்றால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று விஜய்யும் கூறியிருக்கிறார். இதனையடுத்து விக்ரமை அணுகவிருக்கிறார் சூர்யா. விக்ரம் ஒத்துக் கொள்வாரா என்பது விரைவில் தெரியவரும்.
இதற்கிடையே ஒரு சுவாரசியமான சம்பவம்: ஊரில் இருக்கிற குழந்தைகள் எல்லாம் சீயானைப் பார்த்து 'ஓ' போட்டுக் கொண்டிருக்கிற அவரது குழந்தைகள் அக்ஷ¢தா, துருவ் இருவரும் 'அறிந்தும் அறியாமலும்' ஹீரோ ஆர்யாவின் ரசிகர்களாம்.
அண்மையில் பெசன்ட் நகரில் உள்ள விக்ரம் வீட்டிற்கு அருகே ஆர்யா நடிக்கும் படமொன்றின் சூட்டிங் நடந்திருக்கிறது. இதனையறிந்த விக்ரம் தனது குழந்தைகள் இருவரையும் அங்கே கூட்டிப்போய் ர்யாவிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறாராம். விக்ரமின் இந்த பெருந்தன்மையை வருவோர், போவோரிடமெல்லாம் சொல்லி ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறார் ஆர்யா.
|