கதாநாயகன்களாகும் காமெடியன்கள்

காமெடி நடிகர்களை கதாநாயகன்களாக வைத்து படம் எடுப்பது ஹோலிவுட்டில் அதிகரித்திருக்கிறது. அந்த லிஸ்ட்டில் லேட்டஸ்ட்டாக சேர்ந்திருப்பவர் கருணாஸ்.
நடிகர் வடிவேலு நாயகனாக நடித்து வெளிவந்த இம்சை அரசன் 23 ம் புலிகேசி பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்திலும் நாயகனாக நடித்தார் வடிவேலு. விவேக் கதாநாயகனாக நடித்த சொல்லி அடிப்பேன் படம் இன்னும் வெளிவரவில்லை.
சந்தானம், கஞ்சாகருப்பு இருவரும் இணைந்து நடித்த அறை எண் 305 ல் கடவுள் படம் வெளியானது. தற்போது திண்டுக்கல் சாரதி படத்தில் கருணாஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். தொடர்ந்து இரண்டு படங்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. எனவே தொடர்ந்து கதாநாயகனாக நடிக்கலாமா என யோசித்து வருகிறாராம் அவர்.
மேற்கண்ட படங்களில் 23 ம் புலிகேசியைத் தவிர மற்ற படங்கள் எல்லாம் படம் எடுத்தவர்களை காமெடியன்களாக்கியது தனிக்கதை.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|