எந்திரன் படத்திற்கு நெருக்கடி

ரஜினிகாந்தின் ‘எந்திரன்' படத்துக்கும் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. உலகப் பொருளாதார வீழ்ச்சியால் இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்று கடும் நிதி நெருக்கடியில் இருப்பதுதான் முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.
எந்திரன் படத்தின் பட்ஜெட் ரூ.130 கோடி. இதில் ரஜினிக்கு சுமார் ரூ.25 கோடி, இயக்குநர் ஷங்கருக்கு சுமார் ரூ.8 கோடி, ஐஸ்வர்யா ராய்க்கு சுமார் ரூ.8 கோடி, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சுமார் ரூ.8 கோடி என படத்தின் சம்பள செலவே ரூ.50 கோடியைத் தாண்டுகிறது.
படம் பெரிய அளவில் வெற்றி பெற்றால் மட்டுமே போட்ட பணத்தை எடுக்க முடியும் என யோசித்த அந்த தயாரிப்பு நிறுவனம் படத்திலிருந்து விலகிக்கொள்ள முடிவு செய்துள்ளதாம். இதனையடுத்து ரஜினி தலைமையில் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|