‘மரியாதைக்கு’ மரியாதை தரும் நடிகர்

தான் நடித்து வரும் மரியாதை படத்தை தன்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு படமாக கருதுகிறாராம் விஜயகாந்த். அதனால் தனிக்கவனத்தோடு நடித்து வருகிறார்.
விஜயகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் மரியாதை. இயக்குனர் விக்ரமன் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு முன்பே ஒப்புக்கொண்ட படம் விருதகிரி. இந்தப்படத்தை கொஞ்ச நாட்களுக்கு தள்ளி வைத்திருக்கிறார் கேப்டன். வருகின்ற தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு தன்னுடைய இமேஜை உயர்த்தும் முயற்சியில் இருக்கிறார் அவர். மரியாதை படம் வெளிவந்தால் பெண்கள் மத்தியில் தன்னுடைய இமேஜ் உயர்ந்துவிடும் என்று கணக்குப் போடுகிறார். அதற்காகத் தான் மிகக்கவனத்தோடு அந்தப்படத்தில் நடித்து வருகிறார்.
விருதகிரிக்கு காசு போட்டவங்க நிலையை கொஞ்சம் நினைச்சுப்பாருங்க கேப்டன்!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|