நல்ல இசைக்கு இயக்குனர்களும் ஒரு காரணம்

நல்ல இசை உருவாக இசையமைப்பாளர்கள் மட்டுமல்ல இயக்குனர்களும் காரணம் என ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
யுவன்சங்கர் ராஜாவும், செல்வராகவனும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டனர். இதையடுத்து செல்வராகவனின் அடுத்த படமான ஆயிரத்தில் ஒருவனில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறும்போது.
செல்வராகவனுடன் வேலை செய்வது மகிழ்ச்சியான அனுபவத்தைக் கொடுக்கிறது. ஒரு படத்தில் நல்ல இசை உருவாவதற்கு நான் மட்டுமல்ல இயக்குனர்களும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவனின் இசை வெற்றிக்கு செல்வராகவனும் ஒரு முக்கியக் காரணம். படத்தின் கதைக்கேற்ப இசையை வாங்குவதற்கு அவர் அதிகம் உழைக்கிறார் எனத் தெரிவித்தார்.
இதனிடையில் செல்வராகவனின் அடுத்த தெலுங்குப் படத்திலும் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைக்கிறாராம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|