கர்நாடக இசை கற்கும் ஐஸ்வர்யா ராய்

மணிரத்னத்தின் புதிய படத்தில் இயல்பாக நடிக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் கர்னாடக இசை கற்று வருகிறாராம்.
இந்தியில் ‘ராவணா’ என்ற பெயரிலும், தமிழில் ‘அசோகவனம்’ என்ற பெயரிலும் இருமொழிப் படம் ஒன்றை மணிரத்னம் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் உட்பட பலர் நடிக்கிறார்கள். கதைப்படி ஐஸ்வர்யா ராய் கர்னாடக இசை மேதை. அவ்வாறு நடிக்கும்போது கர்னாடக இசை பற்றி கொஞ்சமாவது தெரிந்திருந்தால்தான் நடிப்பு இயல்பாக வரும் என்று முடிவெடுத்த ஐஸ்வர்யா, உண்மையிலேயே கர்னாடக இசை கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார். இந்த வேடம் திரையுலகில் தனக்கு என்றும் அழியாப் புகழைப் பெற்றுத் தரும் என்றும் கூறி வருகிறார்.
இதன் படப்பிடிப்பு கேரள மாநிலம் மலயத்தூரில் உள்ள அடர்ந்த காடுகளில் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதியளித்த கேரள வன இலாகாவினர், பின்பு படப்பிடிப்புக்குழுவினரால் சுற்றுச்சூழல் பாதிப்படைவதைக் கண்டு அனுமதி மறுத்தனர். இதனையடுத்து மணிரத்னம் வேண்டிக் கொண்டு, சுற்றுச்சுழலுக்குப் பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்கிறேன் என்று உறுதியளித்த பிறகு, மீண்டும் அனுமதி வழங்கியுள்ளனர்.
‘அசோகவனம்’ படம் எடுக்கிறேன்னு வனத்தை அழிச்சிறாதீங்கப்பா...!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|