விஜய்யுடன் நடிக்க அஸின் ஆர்வம்

விஜய்யுடன் மீண்டும் நடிக்க ஆர்வமாக இருப்பதாக நடிகர் அஸின் கூறியுள்ளார்.
விஜய்யுடன் அஸின் இணைந்து நடித்த போக்கிரி படம் பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் வேட்டைக்காரன் படத்தில் நடிக்க அஸினை அணுகியுள்ளனர். இந்திப் படங்களில் பிஸியாக இருப்பதால் ஜனவரி முதல் கால்ஷீட் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார் அஸின்.
அஸின் அமீர்காருடன் இணைந்து நடித்த இந்தி கஜினி விரைவில் வெளிவர உள்ளது. இந்தப் படம் நல்ல விலைக்கு விற்பனை ஆகியுள்ளதால் அஸினுக்கு இந்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அடுத்ததாக லண்டன் ட்ரீம்ஸ் என்ற இந்திப் படத்தில் அஜய் தேவ்கன் மற்றும் சல்மான்கானுடன் இணைந்து நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்காக அவருக்கு சம்பளம் 2 கோடி பேசப்பட்டுள்ளது.
தமிழிலும் இதே சம்பளம் கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட பின்னரே வேட்டைக்காரன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் அஸின். ஆனால் விஜய்யுடன் இணைந்து நடிப்பதில் ஆர்வமாக இருப்பதால் தான் இவ்வளவு பிஸியிலும் கால்ஷீட் கொடுத்ததாக பேட்டி கொடுத்துள்ளார்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|