இயக்குநர்கள் ராஜ்ஜியம்

‘மாயாண்டி குடும்பத்தார்’ என்ற படத்தில் 10 இயக்குநர்கள் நடிக்கிறார்கள்.
‘பாண்டி' படத்தை இயக்கிய ராசு மதுரவன் தனது அடுத்த படத்துக்கு ‘மாயாண்டி குடும்பத்தார்' எனப் பெயரிட்டுள்ளார். முதலில் இதற்கு ‘உசிலம்பட்டி அருகில்’ என்று பெயர் வைத்திருந்தார்கள். பின்பு என்ன நினைத்தார்களோ, பெயரை ‘மாயாண்டி குடும்பத்தார்' என மாற்றியுள்ளனர்.
அணைப்பட்டியில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. சபேஷ்-முரளி இசையமைக்கிறார்கள். கதாநாயகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
அண்ணாமலை ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் மணிவண்ணன், அழகம்பெருமாள், சீமான், தருண்கோபி, நந்தா பெரியசாமி, ஜி.எம்.குமார், ரவிமரியா, செந்தமிழன், சிங்கப்புலி, ஜெகன்நாத் என 10 இயக்குநர்கள் நடிக்கிறார்கள்.
நடிகர்களை வைத்து வேலை வாங்குவதில் இயக்குநர்கள் அலுத்துப் போய்விட்டார்களோ?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|