பிரபஞ்ச அழகிப் போட்டி நடுவராக இஷா கோபிகர்

முன்னால் கோலிவுட் நடிகை இஷா கோபிகர் ‘2008 பிரபஞ்ச அழகிப் போட்டி’ நடுவராக பங்கேற்று மும்பை திரும்பியிருக்கிறார்.
தமிழில் நடித்த படங்கள் எதுவும் பெரிய வெற்றியைப் பெறாத நிலையில் கோலிவுட்டில் கரையைக் கடந்த இஷா கோபிகர் தற்போது இந்திப் படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் வியட்நாமில் நடந்த ‘மிஸ் யுனிவர்ஸ்' போட்டியில் நடுவராக கலந்து கொண்டிருக்கிறார். விழா நடக்கும் நான்கு நாட்களுக்கு முன்புதான் அவருக்கு இந்தத் தகவல் தெரியுமாம். லாஸ் ஏஞ்ஜல்ஸிலிருக்கும் அவரது மானேஜர் ஸைமன் ஷெபீல்ட் மூலம் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
விழாவில் பிரபல டிஸைனர் ராபர்டோ காவாலியின் தயாரிப்பை அணிந்திருக்கிறார். எப்போது அதிகம் பேசாத ராபர்டோ இஷாவுக்கு முத்தம் கொடுத்து, ‘பேரழகு' என்று பாராட்டியிருக்கிறார். 2004 பிரபஞ்ச அழகியான ஜெனிபர் ஹாகின்ஸýடனுடன் இஷா போட்டோ எடுத்திருக்கிறார். இதெல்லாம் வாழ்நாளில் எப்போது நினைவில் நிற்கும் இனிமையான தருணங்கள் என்கிறார் இஷா.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|