மர்மயோகியில் வெங்கடேஷ்

மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாராகும் ‘மர்மயோகி’ படத்தில் கமலுடன் தெலுங்கு நடிகர் வெங்கடசும் நடிக்கிறார்.
இதுவரை தயாரிக்கப்பட்ட அனைத்து இந்தியப் படங்களின் பட்ஜெட்டையும் கமலின் ‘மர்மயோகி’ படம் முறியடிக்கப் போகிறது. இதன் பட்ஜெட் 120 கோடி. இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் வெங்கடேசும் நடிக்கிறார்.
இது குறித்து வெங்கடேஷ் கூறுகையில்,
கமலுடன் இணைந்து நடிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. ஒவ்வொரு நடிகரும் அவரிடம் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது. சிறப்பான படம் ஒன்றைத் தருவதற்கு அவர் அதிகம் மெனக்கெடுவார்.
‘மர்மயோகி’ - சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் நடக்கும் கதை இது. தெலுங்குப் படங்களும் இத்தகைய கதையம்சத்துடன் வர வேண்டும். படத்தில் எனக்கு கெஸ்ட் ரோல் கிடையாது. படம் முழுவதும் வருகிற கேரக்டர். கதையை நகர்த்திச் செல்வதற்கு என்னுடைய கதாபாத்திரம் மிக முக்கியம்” என்றார்.
படம் வந்தாத்தானே தெரியும், முக்கிய வேடமா, சில்லறை வேடமா என்று. அர்ஜூன், பிரபுதேவா, ஷாருக்கான் என்று எத்தனை பேரு இப்படி பேட்டி கொடுத்திருக்காங்க...!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|