குசேலன் தோல்வி - மர்மயோகிக்கு சிக்கல்

குசேலன் படத்தினால் பெரும் நட்டத்தைச் சந்தித்த பிரமிட் சாய்மீரா நிறுவனம் மர்மயோகி படத்தை எடுப்பது சந்தேகமே என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கிறார்கள்.
ஆனால் இதை பிரமிடு சாய்மீரா நிறுவனத் தலைவர் சாமிநாதன் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
‘குசேலன்' படத்தினால் நஷ்டமடைந்த தென்னார்க்காடு, செங்கல்பட்டு பகுதி விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஏற்கெனவே நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. இந் நிலையில், கோவை, திருச்சி, நெல்லை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் நஷ்டஈடு வழங்கப்பட்டது. இதனால் ‘குசேலன்' நஷ்டஈடு பிரச்னை சுமுகமாகத் தீர்க்கப்பட்டுள்ளது.
‘குசேலன்' படத்தால் பிரமிடு சாய்மீரா நிறுவனத்துக்கு ரூ.30 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி, வியாபார ரீதியாக விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பணத்தைத் திருப்பித் தரத் தேவையில்லை. ஆனால் மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் நஷ்டஈடு கொடுத்துள்ளோம்.
இனி படத்தின் உரிமையை வாங்கும் விஷயத்தில் புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க உள்ளோம். குசேலன் தோல்வியால், ‘மர்மயோகி'’ படத்தைத் தயாரிக்கும் முடிவிலிருந்து நாங்கள் பின்வாங்கவில்லை. அது பெரிய பட்ஜெட் படம் என்பதால், கமலஹாசனுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்று கூறினார் சாமிநாதன்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|