நாடகத்தில் ஆர்வம் காட்டும் ஸ்டார்கள்

மலையாள முன்னணி நடிகர்களான மோகன்லாலும், மம்முட்டியும் நாடகங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சினிமாவைப் போலவே நாடகங்களுக்கும் மலையாள மக்கள் தீவிர ரசிகர்கள். நாடகங்கள் மூலம் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கும் நடிகர்கள் சினிமாவுக்கு வந்ததும் அதை மறந்து விடுவது இயல்பு. ஆனால் சினிமாவுக்கு வந்து முன்னணி நடிகர்களாக பெயர் பெற்ற பிறகும் நாடகத்தில் நடிக்க மலையாள முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டுவது உண்மையிலேயே வியப்பு தான்.
சயமுகி என்ற நாடகத்தில் பீமனாக நடித்தார் மோகன்லால். போட்டியாக மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் நாடகத்தில் பீமனாக நடிக்கிறார் மம்முட்டி. சினிமாவையும் ஒதுக்கி வைத்து விட்டு நாடக ரிகர்சலில் இரண்டு பேரும் பிஸியாகி விட்டார்கள். இதுகுறித்து கேட்டால், நாடகம் தான் மக்களோடு இன்னமும் நெருங்க வைக்கிறது, சினிமாவை விட நாடகம் தான் அதிகம் இயல்பானதாகவும் இருக்கிறது என்ற ஒரே பதிலை இருவருமே தருகிறார்கள். விரைவில் இருவரும் இணைந்து ஒரே நாடகத்தில் நடிக்க இருக்கிறார்கள் என்பது இன்னும் ஸ்பெஷல்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|