பிரித்விராஜுடன் இணையும் பிரியாமணி

மலையாளத்தில் பெரும்வெற்றி பெற்ற ‘கிளாஸ்மேட்ஸ்’ படம் தமிழில் இப்போது ரீமேக் செய்யப்படுகிறது. இதில் பிருத்விராஜுடன் பிரியாமணி நடிக்கிறார்.
இந்தப் படத்தை குமாரவேல் இயக்குகிறார். இவர் கல்யாணராமன், மீண்டும் கோகிலா, கடல்மீன்கள் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜி.என்.ரங்கராஜனின் மகன் ஆவார். படத்திற்கு நினைத்தாலே இனிக்கும் என்று பெயரிட்டுள்ளார். பிருத்விராஜ், பிரியாமணியுடன் சக்தி, கார்த்திக் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
நான்கு மாணவர்களின் கல்லூரி வாழ்க்கை அனுபவங்கள்தான் இப்படத்தின் கதையாகும். கல்லூரி அனுபவங்களை எப்போது நினைத்தாலும் இனிக்கும் என்பதால் இப்படம் தமிழிலும் நிச்சயம் வெற்றி பெறும் என்கிறார் படத்தின் இயக்குனர் குமாரவேல்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|