இன்னொரு தேசியவிருது?

சிறந்த நடிகைக்கான தேசிய விருது அடுத்த வருடமும் பிரியாமணிக்குத் தான் என்கின்றனர் மலையாளத் திரைத்துறையினர்.
பருத்திவீரன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை பிரியாமணிக்கு சமீபத்தில் தேசியவிருது வழங்கப்பட்டது. இதையடுத்து தமிழ், மலையாள மொழிகளில் பல படங்களில் அவர் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த ‘திரக்கதா’ என்ற படம் அங்கு பெரிய வெற்றி பெற்றுள்ளது. நடிகை ஸ்ரீவித்யாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ஸ்ரீவித்யாவாக நடித்திருந்தார் பிரியாமணி. படத்தைப் பார்த்தவர்கள் பிரியாமணியின் நடிப்பைப் பார்த்து கண்கலங்கி விட்டனராம்.
இந்தப் படத்திற்காக அடுத்த வருடமும் பிரியாமணிக்கு தேசிய விருது கிடைப்பது கன்ஃபார்ம் என்கிறார்கள் மலையாள சேட்டன்கள்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|