சொந்தப்படம் எடுக்கிறார் ரம்பா

நடிகை ரம்பா கதாநாயகியாக நடிக்கும் ‘விடியும் வரை காத்திரு’ படத்தை அவரே தயாரிக்கிறார்.
தமிழின் முன்னணி கதாநாயகியாக இருந்த ரம்பாவுக்கு சமீபகாலமாக நடிப்பதற்கு வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இதனால் படத்தயாரிப்பில் இறங்கினார். முதன்முதலாக அவர் தயாரித்த திரிரோசஸ் படம் பெரிய தோல்வி அடைந்தது. இதில் ரம்பாவோடு லைலா, ஜோதிகா ஆகியோரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். அதன்பிறகு தயாரிப்பில் இருந்து விலகி இருந்த ரம்பா மீண்டும் படம் தயாரிக்கப் போகிறாராம்.
‘விடியும் வரை காத்திரு’ என்ற த்ரில்லர் படத்தை தயாரிக்கிறார். இதில் ரம்பாவுக்கு இணையாக முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். எனக்கு இரண்டு ரொம்ப ராசியான நம்பர். அதனால என்னோட இந்த இரண்டாவது படம் நிச்சயம் வெற்றிபெறும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் ரம்பா.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|