எகிறும் தமிழ் சினிமா நடிகைகளின் சம்பளம்

தமிழ் சினிமா நடிகைகளின் சம்பளம் கோடிகளைத் தாண்டி போய்க் கொண்டிருப்பது தான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் ஆச்சர்யம்.
தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் என்றாலே இரண்டு பாடல்களுக்கு ஆடுவதற்கு மட்டும்தான் என்பதே நிலைமை. அதற்காக அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளமும் சில லட்சங்கள் தான் என்பது தான் கடந்த ஆண்டுவரை இருந்த நிலை.
ஆனால் தற்போது கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கும் சம்பளம் கொடுக்கப்படுகிறது. எந்திரன் படத்தில் நடிப்பதற்காக ஐஸ்வர்யாராய் 6 கோடி ரூபாய் சம்பளத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இந்தியில் பிஸியாகி விட்ட அஸினின் சம்பளம் இரண்டு கோடியாம். தமிழிலும் இதே பணம் கொடுத்தால் தான் கால்ஷீட் கொடுக்கிறாராம்.
நயன்தாராவின் சம்பளம் ஒரு கோடியாம். இதேபோல் ஸ்ரேயா, த்ரிஷாவின் சம்பளங்களும் கோடியைத் தொடுகின்றன.
சம்பளம் தான் உயர்ந்திருக்கின்றது, வேலை என்னவோ அதே இரண்டு பாடலுக்கு ஆடுவது தான்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|