மீண்டும் சிம்ரன்

திருமணத்திற்குப் பிறகு இரண்டாவது ரவுண்டில் நடிக்க வந்த சிம்ரனுக்கு அதிக வரவேற்பு கிடைக்க, சந்தோஷத்தில் இருக்கிறாராம் மேடம்.
தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டவர் சிம்ரன். சில வருடங்கள் கழித்து நடிக்க வந்தவருக்கு ஆரம்பத்தில் பெரிதாக வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. எனவே சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார். இந் நிலையில் சிம்ரன் நடித்து சமீபத்தில் வெளிவந்த வாரணம் ஆயிரம், சேவல் படங்களில் அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது. இதனால் சின்னத்திரையை விட்டுவிட்டு சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் சிம்ரன்.
தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு கல்யாணம் ஆகிவிட்டாலே அம்மா, அண்ணி என மூலையில் நிற்க வைத்து ஓரங்கட்டி விடுவார்கள். சிம்ரன் நிலைமை அந்த அளவுக்கு மோசமில்லை. நடிப்பதற்கு முக்கியமான ரோல்கள் கிடைப்பதால் அம்மணி குஷியில் மிதக்கிறாராம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|