சிரிப்பை நம்பி நான் இல்லை: ஸ்நேகா

வெறும் சிரிப்பை நம்பி நான் இல்லை, நடிப்பை மட்டுமே நம்பி இருக்கிறேன் என ஸ்நேகா தெரிவித்தார்.
நடிகை ஸ்நேகாவின் ஸ்பெஷலே அவரது சிரிப்பு தான். ஆனால் ஒரு காட்சியில் கூட சிரிக்காமல் முதல்முறையாக ‘பவானி’ என்ற படத்தில் நடிக்கிறார் ஸ்நேகா.
இதுகுறித்து அவர் கூறும்போது,
ஆட்டோகிராப், பிரிவோம் சந்திப்போம் போன்ற ஒரு சில படங்களில் தான் நான் எதிர்பார்த்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மற்றபடி படம் முழுக்க என்னுடைய சிரிப்பையே காட்டுகிறார்கள். சிரிப்பைத் தவிர நடிப்பையும் அழகாக வெளிப்படுத்தும் காட்சிக்காக காத்திருந்தபோது பவானி படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.
விஜயசாந்தி நடித்த வைஜெயந்தி ஐ.பி.எஸ். படத்தின் ரீமேக் தான் பவானி. இந்தப் படத்தின் இயக்குனர் பவானிகுமார் என்னிடம் கதையை சொன்னதும் உடனே ஒப்புக்கொண்டேன். இதற்காக இருபதே நாட்களில் ஆறு கிலோ எடை குறைத்திருக்கிறேன். இந்தப்படம் நிச்சயம் என் திறமையை வெளிப்படுத்தும் என நம்பிக்கையோடு சொல்கிறார் ஸ்நேகா.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|