தமன்னாவின் நம்பிக்கை

‘ஆனந்த தாண்டவம்’ படம் வெளிவந்தால் தமிழ் சினிமாவில் எனக்கு முக்கிய இடம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் சொல்லியிருக்கிறார் ‘கல்லூரி’ தமன்னா.
அண்மையில் ‘ஆனந்த தாண்டவம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் பேசியபோதுதான் தமன்னா மேலே உள்ளவாறு கூறினார். இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனது திரையுலக வாழ்க்கையில் முக்கியமான விஷயமாகும் என்றும் கூறினார்.
படத்தின் இயக்குனர் காந்திகிருஷ்ணா பேசுகையில், மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் ‘பிரிவோம் சந்திப்போம்’ நாவல் என்னுள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த நாவல்தான் சிற்சில மாற்றங்களுடன் ‘ஆனந்த தாண்டவம்’ படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தை சுஜாதாவிற்கு திரையிட்டுக் காட்ட முடியவில்லை என்பது எனக்கு மிகப் பெரிய வருத்தமே என்று கூறினார்.
இப்படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். நியூயார்க் நகரில் முப்பது நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். விரைவில் இப்படம் வெளிவரவுள்ளது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|