ஹீரோயிசத்தில் நம்பிக்கை இல்லை

சினிமாவில் ஹீரோயிசத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என இயக்குனர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கிய சென்னை-28, சரோஜா இரண்டு படங்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த இரண்டு படங்களின் சிறப்பு இரண்டிலுமே பெரிய ஹீரோக்களோ அல்லது ஒரே ஒரு ஹீரோவோ நடிக்கவில்லை என்பது தான். இந்நிலையில் வெங்கட்பிரபு தன்னுடைய அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். படத்தின் பெயர் கோவா.
வெளிநாட்டுப் பெண்களை ஜாலிக்காகக் காதலிக்க ஆசைப்படும் 4 இளைஞர்கள், இந்திய இளைஞர்களை திருமணம் செய்து கொள்ளும் லட்சியத்தோடு இந்தியா வரும் 4 பெண்களி இவர்களுக்கு இடையே நடக்கும் ஜாலியான கலாட்டாக்கள் தான் இந்தப்படத்தின் கதையாம்.
உங்கள் படங்களில் நான்கு, ஐந்து பேர் என கும்பலாக நடிகர்கள் இருக்கிறார்களே என கேட்டால், “ஹீரோயிசத்திலோ, அல்லது ஒரே ஒரு ஹீரோ, ஒரு ஹீரோயின், ஒரு வில்லன் போன்ற வழக்கமான படங்களில் எனக்கு ஆர்வல் இல்லை. யதார்த்தமான மனிதர்களை கண்முன் நிறுத்துவதற்கு நிறைய பேர் தேவைப்படுகிறார்கள்” என்கிறார் வெங்கட்பிரபு.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|