நடிக்க வருகிறார் யுவன்

இசையில் பிரமாதப்படுத்தும் இளம் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா நடிப்பிலும் கலக்க வருகிறார்.
வெங்கட்பிரபு இயக்கிய சென்னை-28, சரோஜா இரண்டு படங்களும் பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து வெங்கட்பிரபு ‘கோவா’ என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இதற்கான முழு ஸ்கிரிப்டையும் எழுதி முடித்து விட்டாராம் வெங்கட்பிரபு. இதில் இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா முக்கியமான ரோலில் நடிக்கவிருக்கிறார்.
யுவன் நடிப்பதற்கு ரொம்பவே தயங்க, வெங்கட்பிரபு கட்டாயப்படுத்தி நடிப்பதற்கு சம்மதம் வாங்கியுள்ளார். இதுகுறித்து வெங்கட்பிரபு கூறும்போது, “என்னுடைய படங்களில் அனைவருமே புதுமுகங்கள் தான். எனவே யுவன் நடிப்பது எனக்கு வித்தியாசமாகத் தெரியவில்லை. இசையைப் போலவே இதிலும் நல்ல பெயர் வாங்கி விடுவார் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|