 |
மவுனக் கொலையாளிகள்
என்.டி. ராஜ்குமார்
நாம் செல்லுவோம் என்கிறது
அரவம் நுழைந்த காவியோசை
மசூதிகளையும் தர்க்கா பறவைகளையும்
அடித்து நொறுக்க
நாமென்பது நாமா
நீ வேறு நான் வேறு
நீங்கள் வேறு நாங்கள் வேறு
எல்லோரும் பற்பல இனம்
எல்லோர்க்கும் பலப்பல கடவுள்கள்
பனங்கள்ளும் தென்னங்கள்ளும்
கலந்தடித்த போதை கிறுக்கில்
கருவாடு சுட்டுத் தின்னுகிறாள் எனதம்மை
வலம்புரிச் சங்கிலும் கெண்டியிலும்
மாட்டு மூத்திரம் பிடிப்பவர்களே
பசுக்களை நடுக்காட்டிலிட்டு பின்புறம் தடவும்
ரிஷிமார்கள் கதைக்கிறார்கள்
அஷ்வமேத யாகத்தில் குதிரைகளைப் போட்டு
சுட்டுத் தின்ற கதையை
வரலாறை விழுங்காதே மாமிசப் பாம்பே
எல்லோரும் ஓர் குலம்
எல்லோரும் ஓரினம்
எல்லோரும் ஓர் மக்களென்பதொரு
பரிகாசச் சொல்தானே
மவுனக் கொலையாளிகளே!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|