 |
யாழன் ஆதி கவிதை
தீராத தாகத்தின்
தவிப்புகளில் ஊற்றெடுக்கிறது
வாழ்க்கையின் வேட்கை
ஓடை புரண்டுவந்து
நினைத்த பாதங்கள் உலர்ந்து
அலைகின்றன வெப்ப நிலங்களில்
கழனிகளில் துள்ளிய
ஆரல் மீன்களைக் கொத்திய
கொக்குகள்
வெண்மேகங்களாகித் திரிகின்றன
ஈரப்பதமற்ற காற்றின் திசைகளில்
கானல் மிதக்கும் தெருக்களில்
வாய்பிளந்து கிடக்கின்றன
நகரத்து குடங்கள்
வரப்போகும் தண்ணீர் லாரிக்காய்
மரம் வெட்டியும்
நிலம் உறிஞ்சியும் முடித்த
வாழ்க்கைக் குடங்கள்
நிரம்புகின்றன கண்ணீர்த் துளிகளால்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|