 |
யாழன் ஆதி கவிதை

(வவனியாவில் 12.03.2007 அன்று,அடையாளம் தெரியாத ஒரு தமிழர் துப்பாக்கி ஏந்திய போலிஸ்காரால் சுட்டு கொல்லப்பட்டு கிடக்கிறார்.புகைப்படம்:மகாமுனி சுப்ரமணியம்,இலங்கை)
வன்மத்தின் கைகளில்
கிளம்பிய
கொடூரத்தின் புகைமண்டி
கிடக்கிறது வானம்
ரத்தமுறிஞ்சிய புல்வெளி
காய்ந்து
துயருறுகின்றது
பிணவாடையுடன்
துப்பாக்கி வாங்கிய
உயிர்களின் எண்ணிக்கையில்
கணக்கிடப்படுகிறது காலம்
வெறிபிடித்த
ஆதிக்கத்தின் நரம்புகள் புடைத்த
கைகளுக்கு
இரையாகும் மனித உடல்கள்
ஒதுக்கப்பட்டு கிடக்கின்றன.
துருவேறிய துயரத்தின்
மிச்சங்களை வீசியெறிந்து
சுழல்கின்றது வன்முறைக்கான
ஆதிக்க உலகம்
வீழ்ந்த உடல்களின்
கொப்பளிக்கும் குருதியில்
மாள்கிறது மாந்த நேயம்
புறாக்களை சுட்டு வீழ்த்திவிட்டு
புறங்கைகளை துடைத்துக் கொண்டு
சமாதானத்துக்காய்
சர்ப்பங்களை உற்பத்தி செய்கின்றன
கொலைகளுக்காய் கட்டப்பட்ட
அரசதிகாரப் புற்றுகள்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|