 |
எம் மண் திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்
கோவில் நுழை
தேரிழு
உங்கள் கோவில்
உங்கள் தேர்
ஏன் நாங்கள் நுழைய வேண்டும்
ஏன் நாங்கள் இழுக்க வேண்டும்
உங்களை வணங்குதலுக்கும்
உங்களின் சாமியை
வணங்குதலுக்கும்
வித்தியாசமில்லை
உங்களை சுமப்பதற்கும்
உங்களின் தேரை இழுப்பதற்கும்
வித்தியாசமில்லை
ஆனால் ஒன்றே ஒன்றுதான்
உங்கள் கோவிலும் தேரும்
நிற்பது எம்மண்ணில்
அதை அகற்றத் தேவைப்படுகிறது கோவில் நுழைவும், தேரிழுப்பும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|