 |
யாழன் ஆதி கவிதை
வெட்கம் பிடுங்கித் தின்னுகிறது
நிர்வாணத்தின் முன் ஆடையின்
தலைகுனிவு பற்றி
அதிர்ச்சியின் கோபங்கள் ஊறும்
ரத்த நாளங்களின் கண்கள்
சிவக்கின்றன
ஆட்சி
விஞ்ஞானம்
பொருளாதாரம்
எதுவெனினும்
அடங்கி பம்முகின்றன
மதங்களின் கைகளுக்கு கீழ்
நிர்வாண அசிங்கங்கள்
புனைந்தவேடங்களின் முன்னால்
நின்று குழைகிறது
நாட்டின் உயரதிகாரம்
பகுத்தறிவுப் போர்வையை
உதறிப் போட்டுவிட்டு
கனவு காண்கிறது தேசம்
அடுத்த சாமியாரின் அருளாசிக்காய்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|