 |
யாழன் ஆதி கவிதை

காஷ்மீரின் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினருக்கும் போராளிக் குழுக்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தங்கள் வீடுகள் அழிக்கப்பட்டதை அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர்
வெறிச்சோடிய தெருக்களின்
மருங்குகளெங்கும்
வெறியுடன் அலைகிறது வன்முறை
உக்கிரமான வெயிலென
காஷ்மீர் பூக்களைப்
பறித்து நுணுக்கி
துப்பாக்கி குழல்களின் வெற்றிடத்தை
நிரப்புகின்றன அதிகார முனைகள்
பயந்த மக்களின் விழிகளை
குண்டுகளாக்கும் தந்திரம்
வாய்க்கவில்லை இன்னும் எவருக்கும்
ரொட்டித் துண்டுகளின் மீது உயிர்களைத் தடவி
சாப்பிடும் யாருக்கும் தெரிவதில்லை
பசியின் கைகள்
ஏங்கித் தவிப்பது
மிரட்சியின் குடியிருப்பில்
மலிந்து கிடக்கின்றன
பேசுவதற்கான ஒரு மேசையும்
வாழ்வதற்கான மிச்ச காலமும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|