 |
யாழன் ஆதி கவிதை
அக்டோபர் 14 அன்று, அம்பேத்கர் பவுத்தத்திற்கு மாறிய நிகழ்வை நினைவு கூறும் வகையில் நாக்பூரிலுள்ள தீக்ஷா பூமியில் பத்து லட்சம் மக்கள் திரண்டனர்
தொலைந்த உருவங்களின் மீது
சேகரிக்கப்பட்ட நெருப்புகளை
கிளர்த்தி வளர்த்த நெடுந்தீயில்
பொசுங்கி அவிந்தது
ஜென்மாந்திரங்களின் அடிமைத்தனம்
யுகவிடுதலைக் கீற்றாய்
அண்ணலின் சிந்தனைத் தீயில்
மலர்ந்தது மதமாற்றம்
யாருமறியாத சூத்திரங்களில் கிழிந்த
முதுகு வளைந்த வாழ்வின்மீது
சூட்டுக் கம்பியால் சுழிக்கப்பட்ட
வலி நிவாரண வடிவம் தீட்சாபூமியில்
திரள்கிற மானுடவெள்ள அலைகளில்
தழும்புகிறது விடுதலைக்கான தொனி
கொத்தித் திரியும் பருந்தென
சுழலும் இந்து மதத்திலிருந்து
பெற்ற விடுதலையே
தலித் விடுதலை
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|