 |
யாழன் ஆதி கவிதை

(இலங்கையில் 22.10.2007 அன்று போரில் மாண்ட போராளிகளின் உடல்களை நிர்வாணப்படுத்தி, அப்பகுதி மக்களை பார்வையிடச் செய்திருக்கும் சிங்கள அரசின் கொடூரம்)
ஆனாலும் கொடூரமானது
நிர்வாணத்தைச் சுமத்தும்
பயங்கரத்தின் கைகள்
போர்நியதிகளை சுட்டு வீழ்த்தி
மாண்ட உடல்களை
அவமதித்து மகிழும்
அரசவாதம் இழிவானது
ஆதிக்க இருள் மறைத்த
கண்களில் தவறிய
ஒளியின் முட்டைகள்
பொருளற்று கிடக்கின்றன
போர் தந்திரம்
வெற்றி தோல்வி
இனம் மொழி எல்லை
எல்லாவற்றையும் கடந்து
வலியின் தடைகளை
தூக்கியெறிந்து
விடுதலையின் கைகளைப் பற்றி
நடக்க வேண்டும் மனிதம்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|