தைத்திங்கள் திருநாளாம்...!
தமிழருக்குப் பெருநாளாம்...!
திரைப்படக் கவர்ச்சி ராணி
சிறப்புப் பேட்டித் தருவாளாம்...!
கையில் கரும்பிருக்கும் - அவள்
கடித்துத் துப்பத் தமிழ் இருக்கும் !
புத்தம் புது திரைப்படங்கள்
பொங்கலுக்கு வெளியில் வரும் !
பட்டுத் தங்க வைரமெல்லாம்
பாதையோரக் கடையில் வரும்
பாடுபட்ட உழவனுக்கோ
வங்கிக்கடன் ஓலை வரும்...!
தைத்திங்கள் திருநாளாம்...!
தமிழருக்கு Happy Pongal
டாஸ்மாக் திறந்திருக்கு
தாராளமாய்க் கொண்டாடு...!
கீற்றில் தேட...
தமிழருக்கு Happy Pongal
- விவரங்கள்
- முனு.சிவசங்கரன்
- பிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜனவரி 16, 2012