நாங்கள் தூங்கிக்கொண்டிருந்தோம்....
விழித்துப் பார்த்தபோது
நீங்கள் சுதந்திரமாய் உலாவிக் கொண்டிருந்தீர்கள்

மீண்டும் வலுக்கட்டாயமாய் தூங்க
தாலாட்டிக் கொண்டிருக்கின்றன அரசுகள்
நீங்கள் சுதந்திரமாய் சல்லாபிதுக் கொண்டிருக்கின்றீர்கள்
எங்கள் சோற்றில், குடிநீரில், ஆடையில்,
கல்வியில், பொருளாதாரத்தில், இறையாண்மையில்,
இன்னும் பலவற்றில்....
தேடி அலைந்து சோர்ந்து போய்விட்டேன்
என் கிராமத்துப் பெட்டிக்கடையிலிருந்தும் கூட
தொலைந்து போய்விட்டன "கோலிச்சோடாக்கள்"
உலகம்-கிராமம்-உலகமயமாக்கல்
விளக்கமளிக்கின்றன ஊடகங்கள்
கிராமமாகிப் போன உங்கள் உலகத்தில்
என் உலகமான, என் கிராமத்தை
தேடிக் கொண்டிருக்கிறேன்
அதன் கோலிச்சோடக்களுடன்...
- இளவேனில் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )