கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இந்நிகழ்ச்சி 28-11-2011 அன்று கடலூரிலுள்ள டவுன் ஹாலில் நடைபெற்றது.

                இது சாதி ஒழிந்தது என்ற நூலின் 26 வது அறிமுக நிகழ்ச்சி.

                நிகழ்ச்சிக்கு ஜே. பாலசுப்பிரமணியம் எம்.ஏ., பி.எட். அவர்கள் தலைமை தாங்கினார்கள். பாலசுப்பிரமணியம் அரசு துறையில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றதா? என்பதை கண்காணித்து வருபவர் இதற்காக அவர், மெத்த சிரமங்களோடு புள்ளிவிபரங்களைச் சேகரித்து வருகின்றார்.

                பத்திரிகையாளர் தலித் விடுதலை இதழின் ஆசிரியர் அவர்கள் கருத்துரை நிகழ்த்தினார்கள்.

                நூலையும் இஸ்லாத்தையும் அறிமுகப் படுத்திய வைகறை வெளிச்சம் ஆசிரியர் மு. குலாம் முஹம்மது அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

                நூல் விமர்சனங்களை வழக்கறிஞர் ஓ. எஸ். மணிசேகரன், தொலை தொடர்பு அதிகாரி பொன்னுசாமி, முனைவர் தில்லை நாதன், புரட்சிமணி ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.

                நீதி அரசர் பா. குலாம் முஹம்மது அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள், டி.எம். உமர் ஃபாரூக், அவர்கள்தாம் நூலின் ஆசிரியர் அவர்கள் ஏற்புரை வழங்கினார்கள்.

                மதியம் உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

                நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை அல்லாமல் திங்கள் கிழமை தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. என்றாலும் பெருவாரிகயாக அரசு அலுவலர்கள் இதில் கலந்துகொண்டார்கள்.

                கலந்துகொண்டவர்கள் அனைவரும் மிகவும் பொறுப்பானவர்களாகவும், அரசு அதிகாரிகளாகவுமிருந்ததால் அவர்களிடம் நூலை விற்பனை செய்திட வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் வந்திடவில்லை. ஆகவே நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

                நிகழ்ச்சியின் சிறப்பம்சம் என்னவெனில் கடலூரைச் சுற்றி பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்த தலித் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்திடும் அளவில் அங்குள்ள முக்கியப் பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுதான்.

                அந்த இடங்கள், வடலூர், பண்ருட்டி, பூண்டியம் குப்பம், தியாகவள்ளி, விருதாச்சலம், மான்தோப்பு, ஆலப்பாக்கம், கடலூர், பின்னலூர் ஆகியவையாகும்.

                அதேபோல், பல தலித் அமைப்புகளும் கலந்து கொண்டன. அவை தலித்சேனா, தலித் அரசு ஊழியர்கள் பெடரேஷன், தலித் நீலப்புலிகள் இயக்கம், அம்பேத்கர் பேரவை, அம்பேத்கர் மக்கள் இயக்கம், ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

                கலந்துகொண்டவர்கள் கேட்ட கேள்விகளுக்கு தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் இன் தலைவர் மு. குலாம் முஹம்மது அவர்கள் பதில் சொன்னார்கள்.

                கடலூரிலிருந்து நமது செய்தியாளர்.