என் குழந்தைக்கு
ஒரு இலவச முட்டையைக் கொடுத்து
பதிலுக்கு தனது அலகால்
எங்கள் இரத்தத்தை உறிஞ்சுகிறது
சேவலின்றி குப்பைகளை
அணைத்துக் கொண்டு
முட்டையிடும் நாத்திகக் கோழி.
இன்றைய சந்தை நிலவரம்
மலிவு விலைப் பட்டியல்
வெங்காய விலை கிலோ 80 ரூபாய்
துணை வேந்தர் விலை 1 கோடி
பல்கலைக் கழக பேராசிரியர் விலை 15 லட்சம்
கிராம நிர்வாகி விலை 5 லட்சம்
பேருந்து ஓட்டுனர் விலை 2 லட்சம்
மத்திய அமைச்சர் விலை 600 கோடி
ஜனநாயகத்தின் விலை 1.75 லட்சம் கோடி
விற்ற பொருள் திரும்பப் பெறமாட்டாது
- இப்படிக்கு நிர்வாகம்
- முனைவர் கு.சிதம்பரம் (