இந்து நாளிதழ் தமிழின விரோதியாகவும், தமிழீழ விரோதியாகவும் மற்றும் உலகின் பெரும்பான்மையான தேசியஇன விடுதலைக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மிகமுக்கியமாக இந்தப் பரப்புரையின் விளைவினை தமிழினம் கடந்த ஈழப்படுகொலையின்போது நன்கு உணர்ந்தது. தமது முற்போக்கு முகமூடியால் தமிழீழப் போராட்டத்தை பயங்கரவாதமாக 25 ஆண்டுகளுக்கும் மேலாக சித்தரித்து இந்தியாவில் மட்டுமல்லாது உலகின் முக்கியமான அறிவுசீவிகளை திசைதிருப்பிய இந்து பத்திரிக்கையின் செயலை தமிழனம் எதிர்கொண்டது. இது பெரும் பின்னடைவாக, பல்வேறு தளங்களில் இருந்து வந்து இருக்கவேண்டிய ஆதரவு காலம் கடந்து வருவதற்கும், போரை நிறுத்த வேண்டிய அவசியம் உணர்த்தப்படாமலும் போனதற்கு ஒரு முக்கியமான காரணமாய் இந்துவின் பொய் பரப்புரை அமைந்தது.
தற்பொழுது மீண்டும் தனது புதிய திட்டத்துடன் ராஜபக்சேவின் தமிழின செயல்களுக்கு ஆதரவாகவும், ஈழத்தில் நடக்கும் போருக்குப் பிந்தைய படுகொலைகளை மறைத்து ராஜபக்சேவின் மீதான குற்றசாட்டில் இருந்து காப்பாற்ற முயல்கிற இந்தப் பத்திரிகையின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்த சனநாயக முறையில் எதிர்கொள்ள பெரும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். இந்து பத்திரிகையின் பொய் பரப்புரையை தடுத்து நிறுத்துவது இன்றியமையாத கடமை என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். விரிவாக நடத்த வேண்டிய இந்தப் போராட்டத்திற்கு பெரும் நிதி தேவைப்படுகின்றது. தேவைப்படுகின்ற பொருள் உதவிகளை அளித்து இந்தப் போராட்டம் வெற்றிபெற துணை நிற்குமாறு சகஅமைப்புகளையும், தோழர்களையும் கேட்டுக்கொள்கிறோம். தங்களது நிதி உதவியினை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பெயர் - P .A . PRAVEEN KUMAR
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,
கணக்கு எண் 129601000017929 , Savings Account,
வேளச்சேரி கிளை. சென்னை. IFC Code : ioba0001296
உதவி பற்றிய விவரங்களை தவறாமல்
குறிப்பாக ஈழத்து புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து நிதி உதவி பெறுவதை அறம் சார்ந்து மறுக்கிறோம். தமிழகத்தின் தமிழர்களின் உதவியை மட்டுமே கொண்டு செயல்பட தீர்மானித்து இருக்கிறோம்.
வரவு செலவு கணக்குகளை எங்கள் வலைத்தளத்தில் வெளியிடுகிறோம்.
நிதி தவிர பொருட்களாக - கணினி, வலைதள தொடர்பு (internet connection) , புத்தகங்கள், இதழ்கள், அச்சக உதவி (பிரிண்டிங்) போன்ற உதவிகளையும் வரவேற்கிறோம். உங்கள் உதவித் தொகை மாதத் தவணையாக அமைவது எங்களை நீண்ட காலம் செயல்பட வைக்கும். நன்றி.