மலையாள சினிமா உலகம் பற்றி திவ்யா திவேதி நேர்காணல்

மலையாளத் திரையுலகில் பாலியல் சுரண்டல் மற்றும் பாலினப் பாகுபாடு குறித்த “நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை” வெளியானது. அதன் பிறகான வாரங்கள் கேரள சமூகம் மற்றும் அரசியலின் மனசாட்சியையும் அதன் தார்மீகக் கட்டமைப்பையும் உலுக்கியது. 2017 ஆம் ஆண்டு பொதுச் சாலையில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவரின் பாலியல் வன்கொடுமைக்கு (அதன் வீடியோ பதிவும் உள்ளது) கொடூரமான முறையில் ஒரு நடிகை ஆளான பிறகு பின்னர் ஒரு குழு அமைக்கப்பட்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான நடிகர் திலீப் என்ற சூப்பர்ஸ்டார் இப்போது பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார், அவர் திரைப்பட நடிகர்களின் நற்பணி அமைப்பான அம்மாவால் தீவிரமாகப் பாதுகாக்கப்பட்டார். அதிலிருந்து தப்பிப் பிழைத்தவர் தைரியமாக அந்த வழக்கை சட்டப்பூர்வமாக எதிர்த்துப் போராடத் துணிந்;தார், குறிப்பாக அந்தத் தாக்குதலானது அவளை அவமானப்படுத்துவதற்கும் அமைதிப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்டதாகும். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பார்வதி திருவோத்து, தீடி தாமோதரன், ரீமா கல்லிங்கல், பத்மப்ரியா ஜானகிராமன், ரம்யா நம்பீசன், பீனா பால் உள்ளிட்டோர் தலைமையில் வுமன் இன் சினிமா கலெக்டிவ் (சினிமா பெண்களின் ஒற்றுமை - WCC) உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. WCC இன் அமைப்பானது சினிமாவில் ஆண் ஆதிக்கம், பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பெண்கள் மீதான பாலியல் சுரண்டல் கலாச்சாரத்திற்கு எதிராக குரல் எழுப்பினர். இதனால் அவர்கள் அசாதாரணமான சமூக ஊடக துஷ்பிரயோகங்களுக்கும், தவறான அறிக்கைகளுக்கும், ட்ரோலிங் மற்றும் அச்சுறுத்தல்களுக்கும் ஆளாகி வருகின்றனர். இதனைக் கேரளாவின் பிரபல அறிவுஜீவி ஜெ. ரெகு ‘இந்தப் பிரச்சினைகள் கேரளாவின் ஆழமானதும், எதிர்த்துப் போராடாத சாதிய கலாச்சார வரலாற்றிலிருந்து உருவாகின்றன” என்று குறிப்பிடுகின்றார்.

இந்தச் சூழ்நிலையில் பல சாதிய எதிர்ப்பு அறிவுஜீவிகள் இந்த முன்னேற்றங்கள் குறித்து பேராசிரியர் திவ்யா திவேதி பேசுவதைக் கேட்க விரும்பினர். கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் தலித் பிஎச்.டி ஆய்வாளரான தீபா மோகனனுக்குத் தனது ஆதரவை அளித்தது உட்பட கடந்த காலங்களில் கேரளாவில் சாதிய ஒடுக்குமுறை மற்றும் பாலின பாகுபாடுகளுக்கு எதிராகத் தனது குரலை ஓங்கி ஒலித்தவர் பேராசிரியர் திவ்யா திவேதி அவர்ககள். மேலும், அனுபமா எஸ் சந்திரனின் விஷயத்தில் கேரள மாநிலம் சவர்ண ஆணாதிக்க நெறிமுறைகளை நிலைநிறுத்த முயல்வதையும்,   கோட்டயத்தில் உள்ள சினிமா மற்றும் கே.ஆர். நாராயணன் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் விசுவல் சயின்ஸ் அண்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்களின் சாதியுப் பாகுபாட்டை எதிர்த்துப் போராடிய மாணவர்களுக்கும் தனது ஆதரவைத் தெரிவித்தவர் இவர்.  அது குறித்த அவரது அறிக்கையானது “மலையாள சினிமாவின் உயர் சாதி மேலாதிக்கத்தை வெளிப்படுத்துங்கள்” என்ற தலைப்பில் மாத்யமம் இதழில் வெளியானது. இத்தகைய ஆதிக்கத்திற்கு எதிராகப் போரடியதன் பேரில் அவருக்கு எதிராக மோசமான ட்ரோல்கள், சமூக ஊடக துஷ்பிரயோகங்கள், அவரது வார்த்தைகள் குறித்த கொடூரமான தவறான பகிர்வுகள் மற்றும் கொலை மிரட்டல்கள் போன்றவையும் நடைபெற்றன. அத்தகையதொரு சூழலில்; இந்திய சவர்ண ‘தாராளவாதிகள்’ மற்றும் ‘இடதுசாரிகள்’ அவரைக் கை விட்டனர். அப்போது, கேரளாவின் சாதிய எதிர்ப்பு அறிவுஜீவிகளே அவருக்கு ஆதரவை அளித்து வந்தனர். அவரது சமீபத்திய புத்தகம் (ஷாஜ் மோகனுடன்  இணைந்து எழுதப்பட்டு மாயெல் மோன்டவெல்லால் திருத்தப்பட்டது) இந்தியத் தத்துவம், இந்திய புரட்சி : சாதி மற்றும் அரசியல் (ஹர்ஸ்ட் பப்ளிஷர்ஸ், யுகே, 2024), நான் அவரை மதிப்பாய்வு செய்ததில், இரண்டு வகையிலான தன்மைகள்  மலையாள சினிமாவில் உள்ளன. அவை மலையாள சினிமாவில் பெண்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் என்ன நடக்கிறது.

- தீப்தி கிருஷ்ணா

தீப்தி கிருஷ்ணா: நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை (அறிக்கையின் பல பிரிவுகளை மறைத்த பின்) சமீபத்தில்தான் வெளியிடப்பட்டது. மக்களின் கவனத்தை ஈர்க்கும் உள்ளடக்கங்கள் இவ்வறிக்கையில் உள்ளன. குறிப்பாகச் சினிமாவில்; பெண்களின் மீதான பாலியல் சுரண்டல் அதிகமாக இருப்பதை இவ்வறிக்கை வெளிப்படுத்துகின்றது.. இத்துறையில் ஆணாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக “அதிகார குழு" போன்ற ஒரு மாஃபியாக்கள் குழுவும் இருந்துள்ளது.  பெரும்பாலும் பெண்கள் அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய வேலை நிலைமைகளைக் கொண்டிருக்கவில்லை. சில பெண்கள் மட்டுமே - பெரும்பாலும் இல்லை, ஒருவேளை பயம் மற்றும் அரசாங்கம் மற்றும் சட்ட நடைமுறைகள் மீதான நம்பிக்கையின்மை காரணமாகத் தங்கள் கதைகளை அந்தச் சுழ்நிலைகளில் சொல்லத் தயங்கிருப்பர். ஆனால், தற்போது -தங்கள் கதைகளைச் சொல்ல வந்துள்ளனர், இது மிகப் பயங்கரமானது. இது உங்களை ஆச்சரியப்படுத்துகிறதா அல்லது உங்களுக்க அதிர்ச்சியாக இருக்கிறதா?

திவ்யா திவேதி: சில விஷயங்கள் என்னை ஆச்சரியப்படுத்தியது. ஹேமா கமிட்டி அறிக்கை 2019 ஆம் ஆண்டு CPI-M தலைமையிலான அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது ஏன் இவ்வளவு காலம் தாமதிக்கபட்டது? அதன் சில பகுதிகளை மட்டும் ஏன் நீண்ட டிரெய்லர் போல வெளியிட வேண்டும்? பெண் நடிகைகளைக் கொடுமைப்படுத்திய வரலாறு தெரிந்த சினிமா நட்சத்திரங்கள் ஏன் இந்த அரசாங்கத்தில் கொண்டு வரப்பட்டனர்? சிபிஐ-எம் ஏன் வேட்டையாடுபவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் ஒரு ‘மாநாட்டை’ ஒரு 'மகத்தான தீர்வாக” முன்மொழிந்தது? முதலமைச்சரை ‘இரட்ட சங்கன்’, (இரட்டை இதயம்) மோடியை 56 அங்குல மார்பன் என்று சிபிஐ - எம் தனது அடைமொழியால் கூறியது போல முதலமைச்சரைக் கவர்ச்சியின் 'கேப்டன்' என்று காட்டவா? இவை அனைத்திற்கும் மேலாக சிபிஐ-எம் மற்றும் ஆர்எஸ்எஸ் இடையேயான தொடர்பை, தி கேரவனில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன. ‘கம்யூனிஸ்ட்’ என்று பெயரிடப்பட்ட கட்சிகள் பெண்களின் உரிமைகளுக்காக வலுவான அமைப்புகளை உருவாக்கிய அமைப்புகள் அல்லது அந்த அமைப்புகளுனுடன் இணைந்திருப்பதால் இது மேலும் கவலை அளிக்கிறது.

அறிக்கையின் வெளிப்பாடுகள் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. 1983 இல் எடுக்கப்பட்ட "லேகயுடே மரணம் ஒரு ஃப்ளாஷ்பேக்" திரைப்படத்தை நான் பார்த்திருக்கிறேன், இது காஸ்ட்யூமர்கள், மேக்கப் ஆண்கள், இயக்குனர்கள், நடிகர்கள் உட்பட திரைப்படத் தயாரிப்பின் அனைத்து அம்சங்களிலும் ஆண்களால் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகும் பெண்கள் குறித்தும், பெண்களின் வாழ்க்கையை அழிக்கும் நிகழ்வுகள் குறித்தும் ஒடுக்கப்பட்ட ஓர் ஆவணப்படமாகும். இது ஷோபா என்ற குழந்தை நடிகையின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது, அவர் பெண் வேடங்களில் நடித்தார் - அவர் நிச்சயமாக மேதைதான் - ஆனால் 17 வயதில் தற்கொலை செய்து கொண்டார். பாலுறவுக்குட்படுத்தப்பட்ட அந்தப் பாலியல் துன்புறுத்தல்களுக்குட்பட்ட காட்சிகளைப்; பார்ப்பது கவலை அளிக்கிறது. ஷோபனாவுக்கும் அப்படித்தான் இருந்தது என்று சமீபத்தில் நான் அறிந்தேன், அவள் 14 வயதில் ஒரு பாலியல் சுரண்டல் சினிமாவில் நடிக்க வைக்கப்பட்டாள், அது குறித்து அவர் கருத்து தெரிவித்தார். இந்த விஷயத்தில் சட்ட ரீதியாக விவாதித்து, குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் பாலியல் சுரண்டல் சினிமா குறித்து சில முடிவுகளை சட்டரீதியாக நாம் அவசரமாக எடுக்க வேண்டும்.

தீப்தி கிருஷ்ணா: : மயெல் மோன்டெவில்லின் கலிப்சாலஜி பற்றிய கருத்தானது ‘ஓர் அமைப்பு அதன் நோக்கங்களைத் அதன் நோக்கங்களாகப் பயன்படுத்துகிறது. அத்தோடு, உண்மையாகத் தன்னைத் திரும்பத் திரும்பச் செய்யும் அமைப்பாகவும் இருக்கிறது" என்று வரையறுக்கிறது (இந்தியத் தத்துவ கருத்துகளின் சொற்களஞ்சியத்தைப் பார்க்கவும்). சினிமாவில் "கலிப்சாலஜி" இருக்கிறது என்று சொன்னால் அது தவறாகுமா?

திவ்யா திவேதி: சிறுபான்மையினர் பெரும்பான்மையினரைச் சுரண்டுவதும், சுரண்டல் கட்டமைப்பில் இருந்து நம் கவனத்தைத் திசை திருப்புவதும் அனைத்து அம்பேத்கரியர்களுக்கும் நன்கு தெரிந்ததே. சாதிய ஒடுக்குமுறையும் சுரண்டலும் அரசியலில் ‘வர்க்கக் கோட்பாடு’ மற்றும் ‘மத மோதல்கள்’ மூலம் மறைக்கப்படுகின்றன. அதுபோல, மலையாள சினிமாவும் இதிலிருந்து இம்மி கூட விலகாமல் இருக்கிறது.

கேமராவுக்குப் பின்னும் முன்னும் பெண்களைச் சுரண்டுவதற்கான கட்டமைப்பு இன்றும் உயர் சாதிகளின் மேலாதிக்கமாகவே உள்ளது, இது ஒரே நேரத்தில் நியாயப்படுத்தப்பட்டு பிரபல சினிமாவின் கவர்ச்சிகள் மற்றும் கருப்பொருள்கள் மூலம் கொண்டாடப்படுகிறது. சினிமாவில் பணிபுரியும் பெண்களை இழிவுபடுத்துவதையும் ஆணாதிக்கத்தை நியாயப்படுத்தும் வகையில், உயர் சாதி ஆண் மேலாதிக்கத்தையும்; நிலப்பிரபுத்துவ பிரச்சாரத்தையும்; சினிமா மூலம் உருவாக்கும் இந்த அமைப்பானது இந்தியச் சமூகத்திற்கு ஒப்பானது அத்தோடு ஒரே மாதிரியானதும் கூட. இந்தப் படங்களில் பெரும்பாலானவை கசபா (2016), பிரஜா (2001) பெண்கள் எப்படி அதிகாரப் பதவிகளை வகிக்க முடியாது என்பதையும், அதைவிடக் குறைந்த தரவரிசையில் இருக்கும் ஆண் அதிகாரிகள் எப்படிப் பொதுவெளியில் அவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தலாம் என்பதையும் காட்டுகிறது. துணிச்சலான நடிகைகள் பொதுவெளியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதில் ஆச்சரியம் ஏதுமுண்டா? இந்த நடைமுறை கல்வித்துறை உட்பட அனைத்துக் களங்களிலும் உள்ளது, ஒவ்வொரு இடத்திலும் அதன் தன்மை வேறுபட்டது. துஷ்பிரயோகத்தை நிரந்தரமாக்குவதற்கான வழிமுறைகள் இந்தச் செயல்முறையின் முடிவாக இருக்கிறது. தொழில்நுட்ப ரீதியாக, இதுவும் கலிப்சாலஜிதான்.

தீப்தி கிருஷ்ணா: கேரளாவில் உள்ள பெண்களும் WCC - அமைப்பும் கேரள அரசாங்கத்திடம் என்ன கோர வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

திவ்யா திவேதி: இது அனைத்து நிறுவனங்களிலும் பாலினம் மற்றும் சாதிய விழிப்புணர்வுத்; திட்டங்களின் தொடக்கமாக இருக்கலாம், ஆனால் இந்தத் திட்டங்கள் சட்ட நடவடிக்கைகளால் பின்பற்றப்பட வேண்டும். முழு அறிக்கை வெளியிடப்படும் வரை இடைவிடாத போராட்டங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்தபடி இருக்க வேண்டும். ஏற்கெனவே மலையாள சினிமாவின் மாஃபியா அமைப்புகள் சில பெண்களைத் தங்கள் பிரதிநிதிகளாகக் கொண்டு இந்த அறிக்கையை இழிவுபடுத்தவும் குறை மதிப்பிற்கு உட்படுத்தவும் தொடங்கிவிட்டதாக அறிந்தேன். மேலும், ஆணையத்தில் வாக்குமூலம் அளித்த பெண்களுக்குச் சட்டப் பாதுகாப்பை அரசிடம் கோர வேண்டும். அந்தப் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், இந்த நெருக்கடியில் கேரளா தனக்குத்தானே நேர்மையாக இருக்க வேண்டும் என்றால், இந்த அறிக்கை எவ்வாறு நசுக்கப்பட்டது, அது அரசிடம் இருந்தபோது யாருக்குக் கிடைத்தது, யாரைப் பாதுகாக்கிறது என்பது குறித்து அவசர விசாரணையும் நடத்தப்பட வேண்டும்.

தீப்தி கிருஷ்ணா: சினிமாவில் பெண்கள் சந்திக்கும் ஊதிய ஏற்றத்தாழ்வு பிரச்சனைக்குத் தீர்வு உண்டா? சினிமா வேலை வாய்ப்பில்; சாதி அடிப்படையிலான புள்ளிவிவரங்கள் எதுவும் எனக்குத் தெரியாது, எனவே சாதி அடிப்படையிலான ஊதிய ஏற்றத்தாழ்வு பிரச்சினையை இன்னும் எழுப்ப இயலாது. அரசாங்கத்தில் சிலர் முன்வைக்கும் வழக்கமான வாதம் என்னவென்றால், ஆண்களுக்கு மட்டுமே சந்தை இருப்பதால் பெண்கள் குறைந்த ஊதியத்தை ஏற்க வேண்டும் என்பது.

திவ்யா திவேதி: நாம் பேசும் இந்த அரசு  சிபிஐ-எம் தலைமையிலான அரசா? குறைந்தபட்சம் ஊதிய சமத்துவத்திற்கான போராட்டத்தில் இது முன்னணியில் இருக்க வேண்டும் அல்லவா? ஒருவேளை நாம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சந்தை) என மறுபெயரிட வேண்டும். ஆனால், அவர்கள் பாலியல் ரீதியாகப் புறநிலைப்படுத்தப்பட்டபோதும் கூட  பெண்கள் இல்லாமல் சினிமா இருந்ததில்லை . மேலும், ஊதிய சமத்துவமின்மை, தவறான வேலை நிலைமைகள் (கழிவறைகள் இல்லை, உடை மாற்றும் அறைகள், பாதுகாப்பு அல்லது தனியுரிமை) மற்றும் பாலியல் அடிமைத்தனம் போன்றை நிகழ்கின்றன.  இவை திரையில் பெண்களின் திறமையும் கவர்ச்சியும் இல்லாமல் இருக்க முடியாத ஒரு சூழலை உருவாக்கியிருந்தாலும், திரைத் தொழிலிலிருந்து லாபம் ஈட்டுவதற்காகப் பெண்கள் சார்ந்த தொழில்மயமாக்கப்பட்ட ஒரு சுரண்டலை உருவாக்குகின்றன. , விளம்பரம் மற்றும் அவற்றின் துணைச் செயல்பாடுகளில். ஆக்னெஸ் வர்தாவின் "கிளியோ டி 5 à 7" இதைப் பிரெஞ்சு சூழலில் சித்தரிக்கிறது.

ஊர்வசி, ஷோபனா, சில்க் ஸ்மிதாவைப் பார்க்க திரையரங்குகளுக்கு மக்கள் சென்றது இல்லையா? வயதான சூப்பர்ஸ்டார்களை விட நயன்தாராவுக்கு அதிக மார்க்கெட் இல்லையா? மேலும் மக்கள் திரையரங்குகளுக்கு முதியவர்களை மட்டுமே பார்க்க செல்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தும் மார்க்கெட் அலசல் எதுவும் இங்கில்லை என்பதை ஜெ. ரகு மூலம் அறிகிறேன். கடந்த இரண்டு தசாப்தங்களில் மலையாள சினிமாவின் பெரும்பாலான வெற்றிகள், அதிகம் அறியப்படாத நடிகர்களைக் கொண்ட புதிய திரைப்படத் தயாரிப்பாளர்களால் உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது. “பிரேமலு”, “மஞ்சும்மேல் பாய்ஸ்”, “உள்ளொழுக்கு” போன்ற சமீபத்திய வெற்றிகள் கூட வயதான சூப்பர் ஸ்டார்கள் இல்லாமல் கிடைத்தவை.

இப்போது, இந்த ஊதிய சமத்துவமின்மைக்கான தீர்வுகள் எங்களிடம் உள்ளன: வேலைநிறுத்தம் மற்றும் புறக்கணிப்பு என்ற உன்னதமான மார்க்சிய தந்திரம். சினிமாவில் பெண்களுக்குச்; சமமான ஊதியம் வழங்க மறுக்கும் எந்தவொரு திரைப்பட யூனிட்டிலும் வேலை நிறுத்தம் செய்ய வேண்டும். ஆண்களை விட பெண்கள் குறைவான சம்பளம் வாங்கும் அனைத்துப் படங்களையும் பொதுமக்கள் புறக்கணிப்பது இன்னும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, இந்த அருவருப்பான நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான ஒரே வேலை, கட்டண அளவை ஆராய்ந்து வெளிப்படுத்துவதுதான்.

தீப்தி கிருஷ்ணா: மோகன்லால், மம்முட்டி போன்ற வயதான மனிதர்களையும், ஒப்பீட்டளவில் இளையவரான பிருத்விராஜையும் வைத்து எடுக்கப்பட்ட ஹைப்பர் மேக்கோ படங்களுக்கு அர்ப்பணிப்புள்ள பார்வையாளர்கள் இருக்கிறார்கள் என்பது வழக்கமான வாதம். ஆனால் இந்த நட்சத்திரங்களின் சினிமா ‘ஆண்மை’ ட்ரோப் அவர்களால் பொதுவில் பயன்படுத்தப்படுகிறது. இது சினிமாவில் துஷ்பிரயோகம் செய்பவர்களைக் காக்கும் வண்ணம் இளைஞர்களின் மனதில் நச்சுத்தன்மை வாய்ந்த இந்த ஆண்மை விளையாடுகிறது. நீங்கள் முன்பே சொன்னது போல், இது கலிப்சாலஜி அமைப்பு.  மலையாள சினிமாவின் குறிப்பிட்ட நச்சுத்தன்மையை எப்படி புரிந்து கொள்கிறீர்கள்?

திவ்யா திவேதி: பொதுவில் எந்தவொரு முறையான நடத்தையையும் சரியாகச் செய்ய வேண்டும், அதாவது இழுத்தல் அல்லது ஆடை விளையாட்டு போன்றவை, அப்படி இல்லையெனில் அது நகைச்சுவையானதாக மாறிவிடும். உலகம் முழுவதும் ஆண்கள் சுருட்டு புகைப்பதை நாம் காண்பது நகைச்சுவையான ஆண்மையல்லவா. அவர்களால் ஓட்ட முடியாத கார்களில் ஏறுவது, அவர்களின் குரல்வளையை கிழித்து உரத்த குரலில் பேசுவது. அவர்கள் டில்டோ தொப்பிகளையும் அணிவது.

வயதான சூப்பர்ஸ்டார்களின் சண்டைக் காட்சிகள் அவர்களின் பார்வையாளர்களின் மனதை வெளிப்படுத்துகின்றன. சண்டைகளின் போது உலகம் தி மேட்ரிக்ஸாக மாறுகிறது. அத்தோடு, இந்தப் பலவீனமான வயதானவர்கள் "நியோஸ்" ஆகவும் மாறுகிறார்கள். அதாவது, ஒரு ஹைப்பர் பேண்டஸியில் மட்டுமே (தயவுசெய்து எழுத்துப்பிழையை வைத்துக் கொள்ளுங்கள்) இந்த மனிதர்களால் நொறுங்காமல் நகர முடியும் என்பது பார்வையாளர்களுக்குத் தெரியும். அவர்களுக்காகக் கூட, அவர்களின் பலவீனம் என்னைக் கவலையடையச் செய்கிறது. சமீபத்தில், ஒரு வயதான நட்சத்திரம் சண்டையிட விரும்பும் இளைஞனாக நடிக்கும் ஒரு படத்தைப் பார்த்தேன். அவரது ஒவ்வொரு அசைவும் ஒழுங்கற்ற மாண்டேஜ்கள் மூலம், கிட்டத்தட்ட ஐசென்ஸ்டீனின் பிரச்சாரப் படமான "அக்டோபர்" பாணியில் கட்டமைக்கப்பட்டிருந்தது, ஏனெனில் இந்த வயதான சூப்பர் ஸ்டாரால் ஒரே ஷாட்டில் முழு திருப்பத்தை முடிக்கவோ அல்லது அவரது கையை முழுவதுமாக ஆட்டவோ முடியாது. அவரது குரல் மிகவும் பலவீனமாக இருந்தது, இதுபோன்ற படங்களை எடுப்பது வயதானவர்களுக்குச் செய்யும் கொடுமை என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் எனது அனுதாபம் குறுகிய காலத்திற்குரியதாக இருந்தது, ஏனெனில் அவரது தாயின் பாத்திரத்தில் அவரது மகள் வயதிருக்கும் இளம் நடிகை நடித்தார். குறிப்பிட்ட சில வேறுபாடுகளுடன், இது பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பிற சினிமா துறைகளிலும் உள்ளது. இந்த வயதான நட்சத்திரங்கள் இளைய வேடங்களில் நடிக்க முயற்சிப்பதும், குழந்தைகளுடன் காதல் செய்வது போன்றவற்றைப் பார்ப்பது கவலை அளிக்கிறது. ‘குருவாயூர் அம்பல நடையில்’ படமும் வித்தியாசமான படமாக இல்லை, முன்னணி நடிகைகள் ஆணின் மகள்களாக இருக்கலாம். இந்த நகைச்சுவையான ஆண்மையும் அதன் உருவ வழிபாடும் ஒரு குறிப்பிட்ட உயர் சாதி மேலாதிக்க தர்க்கத்தைக் கொண்டுள்ளது, இது சினிமாத்தனமான வரலாறு மற்றும் சினிமாவின் வரலாறு மூலம் உருவானது.

தீப்தி கிருஷ்ணா:  இந்த உரையாடல் ‘இந்தப் பிரச்சினையில் சாதியைக் கொண்டுவருகிறது’ என்று பலர் புகார் கூறுவார்கள். கேரளாவின் சாதி மறுப்பு மிகவும் விசித்திரமானது, ஏனென்றால் வெளிப்படையான சாதிப் பிரிவினை மற்றும் ஒதுக்குதல் ஆகியவை பள்ளிகளில் கூட கலாச்சாரத்தின் மீதான சவர்ணக் கட்டுப்பாட்டின் ஒரு முறையாகவே உள்ளது, அதே நேரத்தில் பொதுச் சொற்பொழிவு சாதி வெறியை மறுக்கிறது. ‘ஏப்ரல் ஆய்வறிக்கைகள்’ என்ற உங்கள் கட்டுரையில் நீங்களும் ஷாஜ் மோகனும் ‘சவர்ணா அடையாள அரசியல்’ என்று அழைத்ததன் ஓர் அம்சமும் இதுவே. இது ஒரே நேரத்தில் தன்னை ‘உலகளாவிய’ என்று அழைத்துக்கொண்டு அனைத்துச் சாதி எதிர்ப்பு இயக்கங்களையும் ‘அடையாள அரசியல்’ என்று 'குற்றம் சாட்டுகிறது. ‘சவர்ண மார்க்சியத்திலும்’ இதே போக்கை நீங்கள் அம்பலப்படுத்தியுள்ளீர்கள். சாதி எதிர்ப்பு இயக்கங்களுக்கான மிக முக்கியமானது மார்க்சிய உரை என்று நம்மில் பலர் நம்புகிறோம். கேரளாவின்; இந்தச் சாதி மறுப்பை எப்படி எதிர்கொள்வது?

திவ்யா திவேதி:  சாதி என்பது மலையாள சினிமாவின் தோற்றத்திலேயே உள்ளது, இது சினிமா வல்லுநரான மஞ்சு எடச்சிராவால் ஆய்வு செய்யப்பட்டு கோட்பாடாக வெளிப்படுத்தப்பட்டது, சினிமாவில் உயர்சாதி மேலாதிக்கத்தைப் புரிந்துகொள்ளவும் அதை எதிர் கொள்ளவும் ஆர்வமுள்ள அனைவரும் ஆழமாக இதைப் படிக்க வேண்டும். மலையாள சினிமாவின் முதல் கதாநாயகி பி.கே. ரோஸி என்ற தலித் பெண், புலய சாதிக் குழுவைச் சேர்ந்தவள். ‘விகத குமரன்’ என்ற படத்தில் நடித்தார். உயர் சாதியினர் இன்னும் கலை நிகழ்ச்சிகளைத் தீண்டத்தகாத இடமாக கருதுவதால், நடிகையானவள் தலித்தாக இருக்க வேண்டும். கோவில் விபச்சாரமும் தாழ்த்தப்பட்ட பெண்களை அடிமைப்படுத்துதலோடு தொடர்புடைய நடன வடிவங்களும் நடைமுறையிலிருந்த நாடு இந்த நாடு.   திரையுலக  வரலாற்றில் ஒடுக்கப்பட்ட சாதிச’ சங்கங்கள் காரணமாக, கலைஞர்கள் மற்றும் நடிக்கும் பெண்களைச் சுற்றியுள்ள களங்கம் சினிமாவில் இப்போதும் தொடர்கிறது.

‘விகத குமரன்’ ஜே.சி.டேனியல் என்ற நாடார் இனத்தைச் சேர்ந்தவர் (பிற்படுத்தப்பட்ட சாதி) தயாரித்து இயக்கிய படம். இந்த முதல் மலையாளப் படத்தின் வெளியீட்டை உயர் சாதி கும்பல் சீர்குலைத்தது, மேலும் முன்னணி நடிகை ரோஸியை ஒரு கும்பல் துரத்தியது. அவளுடைய வாழ்க்கையைப் பற்றி எங்களுக்குக் கொஞ்சம் மட்டுமே தெரியும். மலையாளத் திரையுலகில் பெண் வெறுப்பு மற்றும் சாதிய ஒடுக்குமுறைக்கு முதன் முதலாகப் பலியாகியவர் அவர். WCC க்கு அவளது பெயரிட வேண்டும். WCC; அவளது பெயரை வைக்கும் என்று நம்புகிறேன். நான் ஏற்கனவே நம்புவது போல, அவருக்கு நினைவுச் சின்னங்கள் அமைக்க வேண்டும், மேலும் அவர் மலையாள சினிமாவின் தாய் என்று போற்றப்பட வேண்டும்.

பின்னர் பல விருதுகளை வென்ற ‘நீலக்குயில்’ (1954) திரைப்படம் தீண்டத்தகாத பெண்ணின் பாலியல் சுரண்டலைப் பற்றியது. இது ஓர் அப்பாவி படம் இல்லை. தலித்துகள் மீதான உயர் சாதி மேலாதிக்க மனப்பான்மையின் ஒரு பொதுவான அம்சத்தையே இது நிரூபிக்கிறது, பரிதாபம் அல்லது பரிதாப உளவியல் ஒடுக்குமுறையின் ஒரு முறையாகப் பரிதாபம் என்பது மாறியது (யஷ்பால் ஜோக்தண்ட் ஆய்வு செய்த அவமானப்படுத்தும் ஒரு முறை). பரிதாபம் என்பது அரசியலில் மிகவும் ஆபத்தான தன்மைகளில் ஒன்றாக இருப்பதால், விரைவில் அது அங்கீகரிக்கப்பட வேண்டும். உரையாடல்களில் உயர் சாதியினர் தலித்துகளைப் பற்றி பேசுவதைக் கேட்டிருப்பீர்கள், ‘சரி, இவர்களுக்காகவும் ஏதாவது செய்ய வேண்டும்’ அல்லது இலக்கியம் மற்றும் சினிமாவில் ஒரு தலித் பாலியல் ரீதியாக அழிக்கப்பட்டு, இருப்பின் பேரழிவாக மட்டுமே காட்டப்படுவாள். இலக்கியப் படைப்புகளிலும் சினிமாவிலும் தாழ்த்தப்பட்ட சாதிக் கதாபாத்திரங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலையையும் நாம் பார்க்க வேண்டும். பெரும்பாலும், அவர்கள் ஒரு செல்லப்பிராணி போன்ற நட்பில் சித்தரிக்கப்பட்டவர்களாகவும், உயர் சாதியினரின் நலன்களுக்குச் சேவை செய்பவர்களாகவும் முன்வைக்கப்படுவதோடு, அதற்காகப் பாதுகாக்கப்படுவதாகவும் காட்டப்படுகிறார்கள்.

தீப்தி கிருஷ்ணா: மலையாள சினிமாவில் இந்த மாதிரியான படங்கள் ஏன் அதிகமமாக வருகின்றன? அதை எப்படி எதிர்க்க முடியும்?

திவ்யா திவேதி:  இந்த மாதிரியான சவர்ண சினிமா இந்தியா முழுக்க வந்து கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் தான் சாதி ஒழிப்பு கிளர்ச்சி நடைபெற்று வருகிறது. ‘உனக்குத் தகுதியான X கிடைக்கும்’ என்பது போன்ற க்ளிஷே தொடர்களும் வெளி வருகின்றன. உதாரணமாக, ‘நீங்கள் தகுதியான அரசியல்வாதியைப் பெறுவீர்கள்’. இது உண்மையில் தவறானது, குறிப்பாகக் கலைகளில். அது உண்மையிலேயே கலை என்றால், நீங்கள் தகுதியற்ற கலையைப் பெற வேண்டும். கலை சமூகத்தின் நெறிமுறைகளை அழிக்கிறது, இதனை ஷாஜ் மோகன் ‘எதிர்பார்ப்பின் கட்டளைகள்’ என்று அழைக்கிறார். இதுவும் கோடார்ட் சினிமாவைப் பற்றிக் கூறுகின்றது. அது திறந்த நிலையில் இருப்பதால் நம்பிக்கைக்குரியது, எதுவும் சாத்தியமாகும். ‘துவும் சாத்தியம்’ என்ற சினிமா, இன்னும் சாதிய எதிர்ப்புச் சினிமாவைச் சாத்தியமற்றதாகவே பார்க்கிறது! அது சாத்தியமற்றது ஆனால் அது  நடக்கும் போது, அது கலையாகிவிடும்.

நான் விரிவாகக் கூறுகிறேன்: ஒரு சமூகம் ஒழுங்குமுறை நெறிமுறைகளைக் கொண்டுள்ளது, ஆனால்,; இந்தியாவின் சமூகங்களுக்கு அது சாதிய ஒழுங்குமுறையாகவே இருக்கிறது. இந்த நெறிமுறைகள் எந்த வகையிலும் சமூகத்திற்கு ‘உள்ளடக்கமானவை’ அல்ல, ஆனால் அவை எப்போதும் அதன் மீது திணிக்கப்பட்டு சக்தி வாய்ந்த சிலரால் கட்டுப்படுத்தப்படுகின்றன. சவர்ணா கட்டுப்பாட்டாளர்கள் இந்தியாவின் ஒவ்வொரு நிறுவனத்திலும் - அது கல்வி, நாடகம், சினிமா, பத்திரிகை அல்லது தொழில்துறை என - அனைத்திலும் இருந்து - அடுத்த சவர்ண தலைமுறையினருக்குச் சவர்ண மூலதனமாக ஒப்படைக்கப்படுகிறது, பெரும்பாலும் நுழைவாயில் மற்றும் சுரண்டல் மூலம் எந்தவொரு கலைப்படைப்புகளும் ‘தகுதியானவை’ அல்லது இந்தச் சமூக நெறிமுறைகளுக்கு ஏற்ப, சிறந்த பிரச்சாரமாக இருக்கின்றன.. நிலப்பிரபுத்துவ மற்றும் பெண் வெறுப்புக் கருப்பொருள்கள் மூலம் இந்தச் சவர்ண நெறிமுறைகளைப் பரப்பும் சினிமாக்கள், சாதிக் கலப்புகளின் அச்சம் மற்றும் தாழ்த்தப்பட்ட பெரும்பான்மையினரின் அரசியல் ஏற்றம் ஆகிய இரண்டையும் வெளிப்படுத்துகிறது, அதே நேரத்தில் சவர்ண சிறுபான்மையினர் ஒடுக்குமுறைக்கான அனைத்துக் கருவிகளையும் இன்னும் வைத்திருக்கிறார்கள் என்கிற  அச்சத்தைப் பெரும்பான்மையினரிடம் ஏற்படுத்தவும் முயல்கிறது. ஒடுக்குமுறைக்கான அனைத்து கருவிகளும். சுதந்திரத்துக்கான போராட்டமாக இருக்கும், சாதிய எதிர்ப்பு சினிமா - கேரள சமூகத்திற்குத் தகுதியற்ற சினிமாவைக் காணக் காத்திருக்கிறேன்.

தீப்தி கிருஷ்ணா: ‘சமூகத்திற்கு எது தகுதியில்லை’ என்ற அர்த்தத்தில் நீங்கள் கலை என்று பரிந்துரைக்கும் சமீபத்திய படங்கள் ஏதேனும் உள்ளதா? அப்படியென்றால் ஓர் உதாரணம் அல்லது அளவீடு இருக்கிறதா?

திவ்யா திவேதி:  தொழில்நுட்ப ரீதியாகவும், கருப்பொருளாகவும் சமீப வருடங்களில் என்னை நெகிழ வைத்த படம் ‘கர்ணன்’. இது சாதி ஒடுக்குமுறையை எதிர்கொண்டதோடு, பண்டைய கிரேக்க நாடகம், புராணங்கள் மற்றும் அமைதியான சினிமாவின் கூறுகளைக் கொண்டிருக்கிறது. மலையாள சினிமாவில், இடதுசாரி ஆர்வலரும் சிந்தனையாளருமான ஜாய் மேத்யூ எழுதிய ‘சாவர்’ (2023) என்ற இரண்டு படங்கள், ‘வர்க்கக் கோட்பாட்டின்’ மூலம் உயர் சாதி மேலாதிக்கம் மறைக்கப்படுவதைக் காட்டிய இரண்டு படங்கள் என்னைத் தாக்கியது. சாதிய ஒடுக்குமுறை குறித்த அதன் சித்தரிப்பு மிக நுட்பமாகவும் கவலையளிப்பதாகவும் இருந்தது. மற்றொரு படம் ‘படா’ (2022). இதுவும் சாதிக்கு எதிரானது, ‘வர்க்கக் கோட்பாட்டின்’ நீடித்த நிழலுடனும்;, பாலக்காடு மாவட்ட ஆட்சியரை அய்யன்காளி படை (தலித் அரசியல்வாதியான அய்யங்காளியின் படை - 1863 - 1941) என்ற அமைப்பால் பிணைக் கைதிகளாகப் பிடித்ததை நேரடியாகக் குறிப்பிடுகிறது இப்படம்.

தீப்தி கிருஷ்ணா: ஹேமா கமிட்டி அறிக்கை மீதான விவாதங்கள் இப்போது சாதி பற்றிய மௌனமாக இருக்கின்றன. இந்த முன்னேற்றங்களுக்கு முன்பே, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சிறந்த நடிகர் திலகன் (1935 - 2012), மலையாள சினிமா கலாச்சாரத்தின் உயர் சாதி ஆதிக்கத்திற்கும் அதன் சூப்பர் ஸ்டார்களின் சவர்ண வழிபாட்டு முறைக்கும் எதிராக ஒரு மனிதக் கிளர்ச்சியை நடத்தினார். ஹேமா கமிட்டி அறிக்கை, திரையுலகின் உயர்சாதித் தலைவர்களால் திலகன் ஒதுக்கப்பட்டதை நேரடியாகக் குறிப்பிடுகிறது. இது சாதியக் குருட்டுத்தனமாகச் செயல்படும் சமூகத்தின் மற்ற பகுதிகளுக்கு இணையானதாகும். சாதி எதிர்ப்பு அரசியலை அடையாள அரசியலாகவோ அல்லது கீழ்த்தரமான அரசியலாகவோ எப்பொழுதும் கேலி செய்து வரும் CPI-M இந்த நிலைக்கான  குறிப்பிடத்தக்க காரணிகளில் ஒன்றாகும். நீங்கள் முன்பு சொன்ன நிலப்பிரபுத்துவ சினிமாக்கள் சிபிஐ-எம்- ன் சக பயணிகளால் உருவாக்கப்பட்டவை. உயர் சாதி மேலாதிக்கத்தின் வர்க்கக் கோட்பாடு மற்றும் நிலப்பிரபுத்துவ பெண் வெறுப்பு ஆகியவற்றுக்கு இடையேயான இந்தத் தொடர்பை எவ்வாறு உடைப்பது?

திவ்யா திவேதி: இந்தக் கேள்வியானது அதன் வரலாற்றுத்தன்மை மற்றும் ஒரு குறுகிய நேர்காணலின் வடிவத்தின் காரணமாகச் சில வகையில் சிக்கலானது. கொஞ்சம் வரலாற்றுடன் ஆரம்பிக்கிறேன். எனக்குப் பரிச்சயமான மலையாள சினிமாவும் இலக்கியமும் பின்காலனித்துவ ஆய்வுகள் மற்றும் காலனித்துவ ஆய்வுகளின் கல்வி மற்றும் அரசியல் கருப்பொருள்களுக்கு இணையாக நகர்கின்றன. 1980களில், இந்தியாவின் உயர்சாதிக் கல்வியாளர்கள், டாக்டர் அம்பேத்கரால் நடைமுறைப்படுத்தப்பட்ட நவீன அரசியலமைப்புச் சட்டமும், தாழ்த்தப்பட்ட சாதிப் பெரும்பான்மை மக்களுக்கு அரசால் வழங்கப்பட்ட குறைந்தபட்ச இடஒதுக்கீடுகளும் சாதி அடிப்படையிலான கலாச்சார மற்றும் மத உயரங்களில் இருந்து; அவர்களின் வீழ்ச்சியை நிறைவு செய்ததாகக் கூறினர். இது காலனித்துவ ஆட்சி காலத்திலிருந்தே துவங்கியது எனலாம்.  ‘இடது’ மற்றும் ‘தாராளவாத’ உயர் சாதியினர் மற்றும் ஆர்எஸ்எஸ் குடும்ப அமைப்புகளுக்கு இடையேயுள்ள ஒரே வித்தியாசம், பிந்தையவர்களுக்கு இந்த செயல்முறையானது முகலாய ஆட்சியில் தொடங்கியது என்பதுதான்.

1980களில், மண்டல் கமிஷன் அறிக்கையின் பின்னணியில் தேசிய அரசியலில் ழுடீஊ மற்றும் தலித் போராட்டங்களை இந்தியா கண்டது. இந்தக் காலகட்டத்தில்தான் மலையாள சினிமா ஒரு குறிப்பிட்ட செயல்முறையைத் தொடங்கியது, அதனை இந்தி சினிமாவிலும் காணலாம். முதலாவதாக, சில உயர்சாதியினர் தங்கள் கௌரவத்தை இழந்ததை ஆழ்ந்த சோகமானதாகக் காட்டியது, அத்தோடு ஒரு புது வகையான பலி வாங்கலையும் உருவாக்கியது. அடூர் கோபாலகிருஷ்ணனின் திரைப்படமான “எலிப்பதாயம்” (எலிப்பொறி) இதற்கொரு சிறந்த உதாரணம், அங்கு வீழ்ச்சியடைந்த நிலப்பிரபுத்துவ குடும்பத்தின் நாயர் தலைவர் ஒருவர் தனது வீட்டிலிருக்கும் பெண்களை ஒடுக்குகிறார், அதே நேரத்தில் தனது கௌரவம் இடிந்து விழுவதை நிராதரவாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதில் அழகியல்சார்ந்த சுவாரசியமான தருணங்கள் ஏராளம் உள்ளன. சமீபத்தில், ‘பிரமயுகம்’ என்னும் திரைப்படம் மிகவும் சாதிவெறித் திரைப்படம் என்று குறிப்பிடப்பட்டது.

விரைவிலேயே, அதே கருப்பொருளைக் கொண்ட வணிகப் படங்கள், தொடர்ந்து இடஒதுக்கீட்டுக்கு எதிரான பேச்சுக்களுடன் வெளிவந்தன, ஆனால் இப்போது உயர்சாதி ஹீரோக்கள் கற்பனையான கீழ்ச் சாதி எதிர்ப்பாளர்களைச் சினிமாவில் தாக்க முடிகிறது. அவற்றுள் மிக மோசமானது "ஆர்யன்" (1988) என் திரைப்படம்.  கேரளாவுக்கே உரித்தான காமிக் ஆண் மைய கதாநாயகர்களும், சூப்பர்ஸ்டார்களும் இத்தகைய சாதியம் மற்றும் பெண் வெறுப்பு சினிமாக்களால் உருவாக்கப்பட்டவர்களே. நீங்கள் சொன்னது போல, இதுபோன்ற படங்களைத் தயாரித்தவர்கள் சிபிஐ - எம் மற்றும் ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பிடித்தமானவர்கள்.

தீப்தி கிருஷ்ணா: நிலப்பிரபுத்துவம், சாதிவெறி, இடஒதுக்கீடு எதிர்ப்பு, இஸ்லாமிய வெறுப்புத் திரைப்பட தயாரிப்பாளர்கள்  சிபிஐ - எம்- இன் தவறான சிந்தனைகளால் அவர்களின் ஆதரவைப் பெற்றுள்ளனர், இது கேரளாவிற்கு வெளியே உள்ளவர்களால் இன்னும் புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது. கேரளாவில் உள்ள பல அறிவுஜீவிகள் உங்களையும் ஷாஜ் மோகனையும் கம்யூனிஸ்டுகள் என்று கூறுகிறார்கள். நீங்கள் எந்த அர்த்தத்தில் மார்க்சிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட்?

திவ்யா திவேதி:  நீங்கள் சொல்வது சரிதான், கேரளாவின் முதல் சி.பி.எம் - ஐ  முதல்வர் ஒரு பார்ப்பனர். இக்கட்சி கிரீமிலேயர் கொள்கை மற்றும் உயர் சாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டை ஆதரித்தது, இது இடஒதுக்கீடு கொள்கையையே நீர்த்துப்போகச் செய்தது. ஷாஜ் மோகனும் நானும் காங்கிரசையும், ஆர்.எஸ்.எஸ் குடும்ப அமைப்புகளையும் அடிக்கடி விமர்சித்து எழுதினோம், ஆனால் இந்தியாவில் உள்ள ‘கம்யூனிஸ்ட்’ மற்றும் ‘மார்க்சிஸ்ட்’ என்று பெயரிடப்பட்ட கட்சிகள் குறித்து நாங்கள் இதுவரை முறையான எந்தவொரு விமர்சனத்தையும் எழுதவில்லை. ஆனால் கண்டிப்பாக நாங்கள் எழுதுவோம். இருப்பினும்; நீங்கள் குறிப்பிட்ட ‘ஏப்ரல் ஆய்வறிக்கைகள்’ என்ற உரையில் இதுபோன்ற பல சிக்கல்களைப் பற்றி நாங்கள் எழுதியுள்ளோம். இப்போதைக்கு அதை விடுத்து  தற்போதைய வியத்திற்கு வருவோம். ஒரு பொருளின் பெயருக்கும் அந்தப் பொருளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ‘ஏஞ்சலிக்’ என்ற பெண் ஒரு இனப்படுகொலைக்குத் தலைமை தாங்குகிறார்.

நான் ஒரு மார்க்சிஸ்ட் இல்லை, நிச்சயமாக இந்த வார்த்தையின் எந்தப் பொது உணர்வுகளிலும் நான் இல்லை. அரசியல் கோட்பாடு மற்றும் தத்துவ வரலாற்றில் மார்க்ஸ் திருப்புமுனைகளை ஏற்படுத்தினார் என்று நான் நம்புகிறேன். கடுமையான வாதங்களின் மூலம், சமூகங்கள் ஒழுங்குமுறைகளால் ஆனவை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். சிறுபான்மையினர் பெரும்பான்மையினரை ஒடுக்குவதன் மூலம் இந்த ஒழுங்குமுறைகள் பெறப்படுகின்றன. சிறுபான்மையினர் எப்போதும் பெரும்பான்மையினரின் வாழ்க்கையைச் சுரண்டுவதன் மூலம் எல்லா வளங்களையும் அனுபவிக்கின்றனர். ஒவ்வொரு சமூகமும் பல ஒழுங்குமுறைக் கருத்துக்கள் மற்றும் கோட்பாட்டின் அடிப்படையில்; புரிந்து கொள்ளப்படுகின்றன. அல்லது சிந்தனையில் சேகரிக்கப்படுகின்றன. புரிந்துகொள்ளுதல் நிலை அல்லது புரிந்துகொள்ளுதல்; சட்டம் என்பது ஒரு சமூகம் மாற்றமடைவதைக் குறிக்கிறது, எடுத்துக்காட்டாக, நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவத்திற்கு மாறுவது. யோசனைகளின் மட்டத்தில் அசாதாரண மாற்றங்களை உள்ளடக்கியது. ஐரோப்பாவில் மதம் இடம்பெயர்ந்ததும் பொழுதுபோக்கு மற்றும் கலாச்சாரம் அதன் இடத்தைப் பிடித்துக் கொண்டன. எனவே, பொருள் நடைமுறைகளின் அடிப்படையில் புதிய ஒழுங்குமுறைகள் தோன்றுவதற்கான அறிவியலாக வரலாறு இருப்பதால் வரலாற்றைப் படிக்கும் இந்தப் பாரம்பரியம் எனக்குச் சொந்தமானது. ஆனால் அது மார்க்சியமாக மட்டும் இருக்க முடியாது, எந்தவொரு விஷயத்திலும் அது பல விஷயங்களுக்குப் பெயரிடுகிறது. மேலும், இந்தியாவில் முப்பதாயிரமாண்டுகால சாதிய ஒடுக்குமுறையை அது விளக்கவில்லை.

நான் உண்மையில் ஒரு கம்யூனிஸ்ட் என நான் நம்புகிறேன், ஒரு சமத்துவ உலகம், அதாவது உண்மையான ஜனநாயகம் உணரப்பட இது உதவும். அரசியல் மற்றும் பாசிசம் போன்ற அனைத்து வகையான எதிர்ப்பு அரசியலையும் மீறி இந்த லட்சியத்தால் நான்  வழிநடத்தப்படுவேன்;. 

தீப்தி கிருஷ்ணா:  WCC வெளியிட்ட வெளிப்படையான சாதி எதிர்ப்பு அறிக்கைகள் எதுவும் எனக்குத் தெரியாது. அவர்கள் ‘பொதுவாகப் பெண்களுக்கான’ போராட்டத்தின் நிலைப்பாட்டை எடுப்பதாகத் தோன்றுகிறது. இதற்கு முன்னோடியில்லாத காரணத்தால் அவர்கள் மிகவும் தைரியமாக எழுந்து நிற்கிறார்கள், ஆனால் சாதி பற்றிய அவர்களது மௌனம் கவலையளிக்கிறது. WCC க்கு ஏதேனும் செய்தி சொல்ல விரும்புகிறீர்களா?

திவ்யா திவேதி: நான் ஒரு தத்துவவாதி மட்டுமே! அவர்களுக்கு நான் என்ன செய்தி சொல்ல முடியும்?! ஆனால் ஒரு கல்வியாளராக, நிறுவனங்களுக்குள்ளேயே பெண்கள் மீதான பாலியல் சுரண்டல்கள் நடைபெறுகின்றன. இந்தப் பாலியல் சுரண்டல்; சவால்களில் ஒன்று கல்வித்துறையில் நடந்தது என்பதை நான் சுட்டிக்காட்ட வேண்டும். சாதி ஒடுக்குமுறைக்கும் பாலியல் சுரண்டலுக்கும் இடையேயான உறவை முன்னிறுத்திப் போராடிய ராயா சர்க்கார் என்ற அபார தைரியமான இளைஞரால் இப்போராட்டம் வழிநடத்தப்பட்டது. ஆனால், நான் இதிலிருந்து கற்றுக்கொண்டது ரோஸியைப் போலவே, ராயாவும் விலகிச் சென்று காணாமல் போனார். இந்த உண்மையானது WCC பெண்களின் தைரியத்தை மட்டுமே வெளிப்படுத்துகிறது. இந்தியாவில் இவ்வளவு வலிமையான பெண்களைப் போரில் நான் பார்த்ததில்லை! அவர்களின் சில உரைகளையும் நேர்காணல்களையும் படித்தேன். திருவொத்து நகைச்சுவையாக இருக்கும்போது துல்லியமாக இருக்கும். கல்லிங்கல் ஒரு வழக்கறிஞர் போல் தன் வாதங்களை முன்வைக்கிறார். அவர்கள் அவசரமாக சாதியைப் பற்றிப் பேசி, சினிமாவிலும், கேரள சமூகத்திலும் உண்மையான போராட்டத்தைத் தொடங்க வேண்டும். ஏனென்றால், பொதுவாகப் பெண் என்பது எப்போதும் பெண்ணாக இல்லை, இந்தப் பெண் மட்டுமே, இந்தக் குறிப்பிட்ட பெண், சினிமாவில் மேக்கப் பிரிவில் பணிபுரியும் தலித் பெண்ணாக இருக்கலாம் அல்லது ரயிலில் தனியாகப் பயணிக்கும் பாஸ்மாண்டா முஸ்லிம் பெண்ணாக இருக்கலாம், அல்லது மேல் சாதிப் பெண் ஓர் அலுவலகத்தில் ஆண்களால் துன்புறுத்தப்படலாம். அரசியலில் சாதிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் எவரும் பிரதான சவர்ணா ஊடகங்களால் வெளியேற்றப்படுவர். இதனால், WCC அமைப்பு என்பது எளிதாகச் செயல்பட முடியாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். டாக்டர் அம்பேத்கரின் புத்தகங்களுடன் புத்தக அலமாரியின் முன் அமர்ந்து பேட்டி கொடுத்த பத்மப்ரியாவைப் பார்த்தேன். இருப்பினும், சாதிய ஒடுக்குமுறையின் யதார்த்தத்தை எடுத்துரைக்காமல் ஒரு ‘பெண்கள் போராட்டம்’ வெற்றியடையாது. இன்று, இந்தியாவில் எங்கும் சாதி ஒழிப்பு அரசியல் இல்லாமல் மேற்கொண்டு முன்னேற முடியாது.

தீப்தி கிருஷ்ணா: நீங்கள் படிக்க விரும்பும் மலையாளப் படத் தயாரிப்பாளர்கள் யாராவது இருக்கிறார்களா?

திவ்யா திவேதி:  கலைகளில் உள்ள நுட்பங்களில் நான் ஆர்வமாக உள்ளேன், நுட்பங்களின் தோற்றம் மற்றும் திடீர் ஊடுருவல்களைத் தேடி இந்த வழியில் இலக்கியத்தைப் படிக்கிறேன். இந்த வகையில் ஜி.அரவிந்தனின் படங்களை நான் வெகு காலத்திற்கு முன்பே மாணவளாகப் பார்த்திருந்தாலும் அவர் மீது எனக்கு ஆர்வம் உண்டு. நுட்பங்களின் கண்டுபிடிப்பை முடிக்கும் முன், அவர்களின் நுட்பங்களின் தீவிரங்களையும் நீட்டிப்புகளையும் ஆராயும் முன், பேசும் படங்களோடு மௌன சினிமா திடீரென முடிவுக்கு வந்தது. பேசும் சினிமா என்று சொல்லப்படுவதற்குள் அரவிந்தன் அதைத் துல்லியமாகச் செய்துகொண்டிருந்தார். சிக்கலான, ஏறக்குறைய சாதிக்கு எதிரான திரைப்படமான ‘வஸ்துஹாரா’வில் ஒரு காட்சி; உள்ளது. வங்காளத்தில் உள்ள வீடற்ற தலித் மக்கள் அந்தமான் தீவுகளுக்கு அனுப்பப்படும் ஒரு நீண்ட காட்சி, கப்பலின் பெயர், ‘இந்திய முன்னேற்றம்’ என்று படித்தோம். மிகவும் குறிப்பிடத்தக்கது! ஓ.வி.விஜயனைப் போலவே அரவிந்தனும் முதலில் கார்ட்டூனிஸ்ட் என்று பின்னர் அறிந்தேன். இதை நான் பல மலையாளிகளிடம் காண்கிறேன், ஒரு கார்ட்டூனிஸ்ட் வாழ்க்கையின் தேவைகளில் தன்னை வெளிப்படுத்தும் சுருக்கமான மற்றும் நையாண்டிக் கண்ணோட்டம் கொண்டவராக இருக்கிறார்.

திவ்யா த்விவேதி - இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள ஒரு தத்துவவாதியாவார். இவர் காந்தி மற்றும் தத்துவம், இறையியல் எதிர்ப்பு அரசியலில் (ப்ளுாம்ஸ்பரி, 2019) மற்றும் இந்தியத் தத்துவம், இந்தியப் புரட்சி: சாதி மற்றும் அரசியலில் (பதிப்பு. Maël Montévil; Hurst, Westland: 2024) ஷாஜ் மோகனுடன் இணைந்து எழுதியவர்.

தீப்தி கிருஷ்ணா - ஒரு எழுத்தாளர் மற்றும் ஆராய்ச்சி அறிஞர், (DEFL, CUSAT, கொச்சி). இவர் மலையாளம் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் எழுதுகிறார். அத்தோடு,; பத்திரிகைகள், இதழ்கள் மற்றும் ஆன்லைன் போர்டல்களில் கட்டுரைகள் மற்றும் கவிதைகள் மூலம் சமூக தலையீடுகளுக்கு பெயர் பெற்றவர். அவரது முதல் கவிதைத் தொகுப்பு, தி ஷேடோஸ் ஆஃப் மை லைஃப், 2020 இல் கிருஷ்ண தீப்தி என்ற புனைப்பெயரில் வெளிவந்தது. மறுமலர்ச்சித் தலைவர் பொய்கையில் அப்பச்சனின் வாழ்க்கை வரலாற்றைப் பொய்கையில் ஸ்ரீகுமாரகுருதேவன் என ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் (பார்க்காத கடிதங்கள்: 2023). தற்போது கலாச்சார ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார்.

ஆங்கில மூலம்: https://maktoobmedia.com/more/film-and-tv/interview-divya-dwivedi-on-industrialised-sexual-exploitation-caste-and-malayalam-cinema/