அம்மா காலத்திலேயே
அம்மியில் அரைத்தல் நின்றுவிட்டது
உரலில் மாவாட்டவும்
உடம்பு ஒத்துழைக்கவில்லை
இரண்டுமே உடலுக்குக் கேடென்று
இன்னும் உணரவில்லை மக்கள்
இவைகளின இடத்தை ஆக்கிரமித்தன
மிக்ஸியும் கிரைண்டரும்
வெளியேற்ற வழியில்லாமல்
வீடுகளின் ஓரத்தில் கிடக்கின்றன
அம்மியும் உரலும்
வீதிகளில் இன்னும் ஒலிக்கிறது
'அம்மி கொத்தலையோ' குரல்
பரிதாபமாய் நம்பிக்கையுடன்
- பொன்.குமார் (