கீற்றில் தேட...

சுதந்திரக் காற்றை
சுவாசிக்க விரும்பியதால்,
உடலை விட்டு
உயிர்கள் மட்டும் வெளியேற்றப்படுகிறது!.
குளிர்காற்று வீசும் வான் வெளியில்
பறந்து கொண்டிருக்கிறது
உயிர்கள்!

இரத்தங்கள்
இனி வெளியே தெரியாது,
கடும் பனிப்பொழிவில்
அது மூடி மறைக்கப்படும்!

ஆனால் கருவறையை விட்டு
வெளிவரும் ஒவ்வொரு உயிரும்
சுதந்திரம் மட்டும் தான் வேண்டும்
என்று அழுகிறது!

துப்பாக்கியின் கண்கள்
கூர்ந்து கவணிக்கிறது
குழந்தையின் அழுகும் குரலை.

- இராசகம்பீரத்தான் மால்கம் X (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.) 97909 29735