அடுத்த நாளுக்கான
புன்னகைகளை
விட்டுவைத்தபின்
இன்று மலர்ந்த
புன்னகைகளை
அவைகளுக்குரிய முகங்களிலிருந்து கிள்ளி
கூடைகளில்
சேமித்து
விற்கப்படுகின்றன
அவைகளுக்குத் தெரிய வாய்ப்பில்லை
சென்றடைவது தனக்குரிய
முகங்களிலோ இடங்களிலோ
இல்லை என்று....
வலிகொண்ட நேரம்
அவைகளுக்கு உணர்ந்திக்கக்கூடும்
அவைகளுக்குரிய முகங்களிலிருந்து
கிள்ளப்படுகிறோம் என்று ....
அந்த பொழுதுகளில் வலியிருந்தும்
அவைகள் அழுவதே இல்லை
ஏனெனில்
மடியும் வரையில் அவைகள்
புன்னகைகள் மட்டுமே....!
- கலாசுரன் (