கீற்றில் தேட...

man_304நம்பிக்கை நொறுக்கியதாய்
குற்றம் சாட்டப்பட்டவனைச் சுற்றி
உயர்ந்து கொண்டேயிருந்தன விவாதங்கள்..

காயப்பட்டதாய் மட்டுமே
காட்டிக்கொண்ட முகங்களுக்கு
அவசியமாயிருக்கவில்லை விளக்கங்கள்..

விலக்கி வைப்பதாயெடுக்கப்பட்ட
முடிவிற்கு முன்வைக்கப்பட்டதொரு காரணம்..
தங்கள் தொண்டையில் உப்படைத்து
அவனது வயிற்றில் தண்ணீர் நிரப்பிக்கொள்வதாய்..

புன்னகைத்துக் கடந்தவனின்
குவளையினடியில் கரையாத உப்புக்கற்கள்..

- சுரபி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)