கீற்றில் தேட...

காரும்  வீடும்
அப்பாவின் ஆசை
ஆரமும் வளையல்களும்
அம்மாவின் ஆசை
நானும் அக்காவும்
டாக்டராக வேண்டுமென்பது
இருவரின் ஆசை
இன்னும் கொஞ்சநேரம்
தூங்கவேண்டும் என்பது
எங்களின் ஆசை
 
--------
 
விடுப்பெடுத்துக்கொண்டு
ஆளுக்கொருபக்கமாய்
அமர்ந்திருக்கிறார்கள்
அபூர்வமாய்
இருவரையும் இப்படி
அருகருகே பார்ப்பதற்கு
அடிக்கடி ஜுரம் வரவேண்டுமென
ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
 
--------
 
குறுஞ்செய்தி பரிமாற
புழக்கடைக்குப் போகிறாள் அக்கா
திருட்டு தம்மடிக்க
படியேறிச் செல்கிறான் அண்ணன்
போகோவிலிருந்து
எப் டிவிக்குத் தாவுகிறேன் நான்
 
----------
 
கொடைக்கான‌லும் ஊட்டியும்
அங்கேயே இருக்கின்றன
எங்கள் பயணம் தான்
தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.
 
- சிறி.ப.வில்லியம்ஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)