எனக்கு அவனை ரொம்பப் பிடிக்கும்
நாட்கள் மாதங்கள் வருடங்கள்
காலம் கடந்த இடைவெளி விட்ட
சந்திப்பு...
மதுவின் வாசம் அறை எங்கும்
பரவிக் கிடக்க
மதுவின் நிறம் மாறி மாறி
அவன் கண்களைப் போல் கரும்சிவப்பு
நிறமாகியது...
போதையின் உச்சத்தில்
கச்சை கட்டி உக்கிரத்தில் ஆடும்
சுடலையாய்ப் பாடினான்
கவனிப்பாரற்றுக் கிடக்கும்
வாதையின் கவிதையானான்
சுடலையாய், வாதையாய் மாறிய
அவனை மது குப்பிக்குள் அடைத்து
என் கவிதைக்குள் ஊடுருவ விட்டேன்
நாட்கள் கடந்தும் கவிதைக்கும் எனக்குமாய்
கூடு விட்டு கூடு பாய்ந்து கொண்டுருக்கிறான்
அவன்...
- ஐயப்பன் (