நிகழ்ந்துகொண்டிருக்கிறது
ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய
நிதர்சனம் தினம்தினம்
என்றோ தொலைந்துபோயிருந்தது
எல்லா நிகழ்வுக்களுக்கான
நியாயமும்
எப்போதும் போலவே
எதிர்பார்த்திருந்தவைகள் அனைத்தும்
எதிர்பாராவிதமாய்
காலம் மாறத் தேய்ந்துகொண்டிருக்கும்
இழப்பின் வலி கூடுகிறது
மற்றொருமுறையும் கடக்க நேர்கையில்
கழிவிரக்கத்துக்கும் நம்பிக்கைக்குமான
இடைவெளியில் பெருக்கெடுக்கிறது
ஊழியின் வெள்ளம்
மெல்ல அனைத்துமாய்
ஆகிவிட்டிருக்கிறது
எங்கோ குமிழிட்டு
சூழ்ந்த வெறுமையின் இருள்
- சீதாபாரதி (