இஸ்திரியில் வறுத்தெடுக்கப்பட்ட
என் சட்டை ஏதொரு அவசரத்துடன்
என்னை அணிந்து கொள்ள
காற்றிலாடிக்கொண்டிருந்தது...
குமைந்திருந்த அதனில் முதல்
குமிழைக் காணவில்லை...
காணாமல் போன குமிழ்
கண்மறைவாய் நின்றுகொண்டு
என் தயக்கங்களை என்னிடமிருந்து
வெளியே இழுத்துப் போட்டது...
என் தயக்கங்கள் அறை முழுதும்
நிறைந்து விட்ட நிலையில்
அந்தத் தொலைந்த பொத்தான்
தயக்கங்களின் காதுகளில் இந்நேரம்
ஏதேனும் சொல்லிக்கொண்டிருக்கலாம்...
- ராம்ப்ரசாத் சென்னை(