உறவு முறிந்ததும்
சருகாகிப்போன
இலை....
அந்தரத்தில் அகதியாய்
தரை நோக்கி
புதை நிலம் தேடி......
தொட்ட மண்
சுட்டதேன்..?
தரையெங்கும் தார்பூச்சு...
அழுக்கு அண்டம்,
கலவைக் காற்று, கைக்கெட்டிய நிலத்தையும்
உடல் ஒட்டவிடாமல் தடுத்த
கண்ணாடிக்காகிதம்...
இயற்கைச்சக்கரம்
சதுரமாய்....
கீற்றில் தேட...
சதுரமான சக்கரம்
- விவரங்கள்
- கமலன்
- பிரிவு: கவிதைகள்