ஒரு
மிச்சமிருந்த நாற்காலி
பரஸ்பரம் பேசுகிறது!
மூன்றாண்டுக்கு பின்
பார்க்கும் முகம் என்றோ
காதல் அறிமுகப்படுத்திவிட்ட
மனசு என்றோ
ஒரு சலனமுமின்றி
புன்னகைத்து திரும்பிக்கொண்டது
அந்த நாற்காலி!
நலம் விசாரிக்கையில்
ஓலமிட்ட அவள் கைபேசிக்கு
என் அனுமதி கேட்கிறாள்....
இங்கிதம் அறிந்தவள்..
சங்கடங்களை விரும்புவதில்லை...
எனக்கு
பிடித்தமான கவிதையையும்
அவள் விரும்பியதே இல்லை!
நாற்காலி
மிச்சப்பட்டிருந்தது!
- ரசிகன் (