* ஓலமிட்டுத் தொலைகிறது கருப்பு பகலிலான வெள்ளை நிழல்கள் மனதை கொக்கி போட்டு இழுக்கிறது வந்துகொண்டிருக்கும் ஒருவனின் ஈட்டிப் பார்வை அவனது கூரான பார்வையில் மோதிப் பிளந்தது பிராண வாயு மூன்றாம் நுரையீரல் மூச்சடைத்துத் திணறியது புலம்பும் மரங்கள் அழுவதை நிறுத்தப் போவதில்லை பட்டாசுகள் காற்றைக் கிழித்து வெடித்துச் சிரித்தன உலாவும் தென்றலில் மரணம் மணக்கிறது புகை நிழல்கள் விண்மீன்களை விழுங்கி குரூரமாய் நகைத்தது முடிவாக "மரங்கள் நடுவோம்" என்றார்கள்....!!! *** - கலாசுரன்
கீற்றில் தேட...
மூன்றாம் நுரையீரல்...!
- விவரங்கள்
- கலாசுரன்
- பிரிவு: கவிதைகள்