கருப்பர்,
முனியையா..
பாண்டி முனி
எனக்கு மட்டும் ஏன்
பழம் பெயர்..
கருக்கருவாள் சுமந்து
கண்கள் உருட்டி
நாக்கை நீட்டி
வெய்யிலில் காய்ந்து
இருத்தப்பட்டிருகிறேன்.
வருடம் ஒரு முறை
கண்காட்சி,
பொருட்காட்சி,
புத்தகத் திருவிழா போல்
எனைக் காண வருகிறாய்..
சிறிது நேரம் அமர்ந்து பார்
என் அமர்விடத்தில்..
சாராயம் சுருட்டு
மிருக ரத்தம் தெளித்து
கோராமையாக்கிவிட்டு
என் பேர் சொல்லி
பலர் உண்பது அறிவாய்..
விட்டுவிடு என
ஓடிவிடக் கூடும் நீ
யாருக்கு முதல் மரியாதை
என்ற கோபத்தில்
உன் கை அரிவாள்
பிடுங்கி வெட்டப்படும் போது
- தேனம்மை லெக்ஷ்மணன் (